Home தொழில் நுட்பம் ஆப்பிளின் ஐஒஎஸ் 8-ல் ஆச்சர்யம் அளிக்கும் புதிய வசதிகள்! 

ஆப்பிளின் ஐஒஎஸ் 8-ல் ஆச்சர்யம் அளிக்கும் புதிய வசதிகள்! 

482
0
SHARE
Ad

Apple_WWDC-11

சான் பிரான்சிஸ்கோ, ஜூன் 6 – சான் பிரான்சிஸ்கோவில் கடந்த 2-ம் தேதி தொடங்கிய ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்துலக மேம்பாட்டாளர்கள் மாநாட்டில், ஐபோன் மற்றும் ஐபேட்களுக்கான புதிய ஐஒஎஸ் 8 (iOS 8) மற்றும் மேக் கணினிகளுக்கான மேக் இயங்குதளம் (Mac OS) போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன.

பயனர்களின் மாறிவரும் ரசனைக்கேற்ப பல புதிய வசதிகளை ஆப்பிள் நிறுவனம், ஐஒஎஸ்-ன் புதிய பதிப்பில் உருவாக்கியுள்ளது.

ஐஒஎஸ் 8-ல் பல புதிய அம்சங்கள் இருந்தாலும், குறுந்தகவல்கள் அனுப்ப உதவும் ‘ஐமெஸ்ஸேஜ்’ (iMessage) செயலி, தற்போது பிரபலமாக உள்ள வாட்ஸ்அப், லைன் போன்ற செயலிகளுக்கு சவால் விடும் அளவிற்கு நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

apple

#TamilSchoolmychoice

ஐமெஸ்ஸேஜ் செயலியில் அறிமுகமாகியுள்ள மூன்று முக்கிய வசதிகள் பற்றி கீழே காண்போம்:-

பயனர்களின் இருப்பிடங்களை பகிர்ந்து கொள்ளும் வசதி

ஆப்பிள் ஸ்டோரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ‘Find my Friends’ வசதியின் மூலம் பயனர்கள், தங்கள் இருப்பிடத்தை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். ஆப்பிளின் ஐமெஸ்ஸேஜ் செயலியுடன் நேரடியாக இந்த வசதி சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது முற்றிலும் இளைஞர்களை கவரும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

நொடிகளில் ஒலி மற்றும் ஒளித் துணுக்குகளை பகிரும் வசதி 

ஐமெஸ்ஸேஜ் செயலியில் மற்றுமொரு புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் பயனர்கள் நொடிகளில் ஒலி மற்றும் ஒளித் துணுக்குகளை பகிர்ந்து கொள்ள முடியும். காமெராவின் தொடுதிரையை அழுத்துவதன் மூலம் பயனர்கள் இந்த வசதியினை நொடிகளில் செயல்படுத்த முடியும்.

தன்னிச்சையாக குறுந்தகவல் அழிக்கும் வசதி  

ஐமெஸ்ஸேஜ் செயலியில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக மற்ற திறன்பேசிகளுக்கு அனுப்பப்படும் குறுந்தகவல்கள் தன்னிச்சையாக அழியும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

ஆப்பிளின் ஐஒஎஸ் 8 பதிப்பில் செயல்பட உள்ள இந்த அதிநவீன வசதிகளால், தொழில்நுட்ப உலகில் கோலோச்சி இருக்கும் ஆப்பிளின் மதிப்பு மென் மேலும் அதிகரிக்கும் என்பது மட்டும் நிச்சயம்.