Home இந்தியா தமிழக முன்னாள் டி.ஜி.பி. ஆர்.நட்ராஜ், அ.தி.மு.க.வில் இணைந்தார்!

தமிழக முன்னாள் டி.ஜி.பி. ஆர்.நட்ராஜ், அ.தி.மு.க.வில் இணைந்தார்!

490
0
SHARE
Ad

natraj_ipsசென்னை, ஏப்ரல் 2 – தமிழக முன்னாள் டி.ஜி.பி. ஆர்.நட்ராஜ், அ.தி.மு.க.,வில் இணைந்தார். அ.தி.மு.க.வில் நட்ராஜ் இணைந்ததற்கு, நாடாளுமன்ற வேட்பாளராக அவர் நிறுத்தப்படுவார் என்பதே காரணம் என, கூறுகின்றனர்.

சென்னையில்  உள்ள மூன்று தொகுதியில், இரு தொகுதிகளில், அ.தி.மு.க., வேட்பாளர்களின் பிரச்சாரம் சரியில்லை என்றும், எதிரணிக்கு இணையாக அவர்களது தேர்தல் பணி இல்லை என்றும், அ.தி.மு.க., தலைமைக்கு தகவல் சென்றன.

இதனால், நட்ராஜ் போன்ற வலுவான வேட்பாளரை நிறுத்த, அக்கட்சியின் தலைமை முடிவு செய்ததால், நட்ராஜை அவசர, அவசரமாக கட்சி உறுப்பினர் ஆக்கியுள்ளதாக தகவல் கசிந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

நீண்ட அரசுப் பணிக்குப் பின், அரசியலில் குதித்தது பற்றி, ‘தினமலர்’ நாளிதழுக்கு நட்ராஜ் அளித்த சிறப்புப் பேட்டி, முன்பு ஆட்சியாளர்கள் வகுக்கும் திட்டங்களை, செயல்படுத்தும் நிலையில் இருந்தோம்.

இப்போது, நேரடியாக திட்டங்களை வகுத்து, அமல்படுத்தும், அரசியலுக்குச் செல்கிறேன். இதுவும் பொதுச் சேவையின் ஒரு பகுதி தான். அந்த வாய்ப்பை, அ.தி.மு.க., எனக்கு தந்துள்ளது. எனக்கு சிறு வயதில் இருந்தே அரசியல் தாகம் உண்டு.

தமிழகத்தில் வலுவான அரசியல் கட்சி அ.தி.மு.க. தான். அ.தி.மு.க. மக்கள் நலத் திட்டங்கள், வளர்ச்சி திட்டங்களை மிகச் செம்மையாக செயல்படுத்தி வருகிறது. அப்படிப்பட்ட கட்சியில் இணைந்து, மக்கள் பணியாற்ற வேண்டும் என, விரும்பினேன்.

அதனால், அ.தி.மு.க.,வில் இணைந்தேன். மேலும் கட்சியின் பொது செயலர் என்ன செய்ய சொல்கிறாரோ, அதைச் செய்வேன். தேர்தலில் போட்டியிட வேண்டும் என, அவர் சொன்னால் போட்டியிடுவேன் என முன்னாள் டி.ஜி.பி. ஆர்.நட்ராஜ் கூறினார்.