Home தொழில் நுட்பம் ‘செல்லியல்’ நோக்கியா எக்ஸ் (X) திறன் பேசிகளிலும் பதிவிறக்கம் செய்யலாம்!

‘செல்லியல்’ நோக்கியா எக்ஸ் (X) திறன் பேசிகளிலும் பதிவிறக்கம் செய்யலாம்!

517
0
SHARE
Ad

Selliyal Nokia x (2)

#TamilSchoolmychoice

ஏப்ரல் 3 இணையம் மற்றும் திறன் பேசி செயலி வடிவில்  மலேசியாவில் இருந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவரும் ஒரே தகவல் ஊடகமான செல்லியல் தற்போது நோக்கியா எக்ஸ் ((Nokia X) திறன் பேசிகளிலும் (Smart Phones) இடம் பெற்றுள்ளது.

இந்த நோக்கியா எக்ஸ் திறன்பேசிகளைப் பயனபடுத்துபவர்கள் வழக்கம்போல் அண்ட்ரோய்ட் தொழில் நுட்பத்தில் இயங்கும் பிளேஸ்டோர் (Play Store)  என்ற இயங்குதளத்தின் மூலம் ‘selliyal’என்ற பெயரைத் தேர்வு செய்து பதிவிறக்கம் செய்யலாம். 

தொடர்ந்து செல்லியல் உடனுக்குடன் வழங்கும் செய்திகளையும், நேரடியாக திறன்பேசிகளுக்கு குறுந்தகவல் வடிவில் அனுப்பப்படும்  முக்கிய செய்திகளையும் இனி நோக்கியா எக்ஸ் திறன்பேசிகளில் பயனர்கள் இலவசமாகப் பெறலாம்.

செல்லினம் செயலியும் நோக்கியா எக்ஸ் திறன்பேசிகளில்…

ஏற்கனவே, செல்லினம் செயலியும் நோக்கியா எக்ஸ் திறன்பேசிகளில் இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திறன்பேசிகள் மூலமாக தமிழிலேயே குறுந்தகவல்களையும், மற்ற தகவல்களையும் பரிமாற்றம் செய்யும் செயலியாக செல்லினம் செயலியை தமிழ் இணைய உலகில் பிரபலமான முத்து நெடுமாறன் உருவாக்கி அறிமுகப்படுத்தினார்.

தற்போது, அண்ட்ரோய்ட் இயங்கு தளத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டு சாதனை புரிந்துள்ள செல்லினம், அதே அண்ட்ரோய்ட் இயங்குதளத்தைக் கொண்டு நோக்கியா நிறுவனம், அறிமுகப்படுத்தியுள்ள நோக்கியா எக்ஸ் திறன் பேசிகளில் ஏற்கனவே இடம் பெற்றுவிட்டது.

நோக்கியா எக்ஸ்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு குறுகிய காலத்திலேயே விற்பனையில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நோக்கியா எக்ஸ் திறன்பேசி,– மலிவான விலை, நிறைவான தொழில் நுட்பங்கள் – போன்ற அம்சங்களால் பயனீட்டாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

ஒரு காலத்தில் கைத்தொலைபேசி உலகில் கொடி கட்டிப் பறந்த நிறுவனம்நோக்கியா. கைத்தொலைபேசி என்றால் அது நோக்கியா தான் என்று மக்கள் பிரித்துப்பார்க்க முடியாத அளவிற்கு பிரபலமாகிவிட்ட நோக்கியா, பின்னர் ஆப்பிள்நிறுவனத்தின் ஐபோன்கள் மற்றும் சாம்சுங் நிறுவனத்தின் திறன்பேசிகளின்  வருகையால் வணிகத் துறையில் பின்னடைவுகளைச் சந்தித்தது.

தனது கைத்தொலைபேசிகளில் கூகுளின் அண்ட்ரோய்ட், ஆப்பிள் நிறுவனத்தின்ஐஓஎஸ் தொழில் நுட்பங்களுக்கு இணையாக, மைக்ரோசோஃப்ட் நிறுவனத்துடன் இணைந்துவிண்டோஸ்-போன் தொழில் நுட்பத்தைக் கொண்ட கருவிகளை லுமியாஎனும் பெயரில்நோக்கியா அறிமுகப்படுத்தியது. இருப்பினும் இந்த அறிமுகம் நோக்கியாவின்கையடக்கக் கருவிகளுக்கு எதிர்பார்த்த வரவேற்பைத் தரவில்லை.

இந்நிலையில், நோக்கியா தனது குறைந்த விலை திறன்பேசிகளில் அண்ட்ரோய்ட்தொழில் நுட்ப இயங்குதளத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, நோக்கியா எக்ஸ் வகைத் திறன் பேசிகளை அந்நிறுவனம் சீனா, இந்தியா மற்றும்தென்கிழக்காசிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்திலேயே நோக்கியா எக்ஸ் ரகதிறன் பேசிகள் விற்றுத் தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவிலும் இதன் விற்பனை சாதனைகளை ஏற்படுத்தும் எனஎதிர்பார்க்கப்படுகின்றது.

மாறிவரும் தொழில் நுட்பங்களுக்கேற்ப, தமிழை நவீன தொழில் நுட்பத்திற்குள் கொண்டு வந்து தகவல் ஊடகத் துறையில் புதுமைகளை ஏற்படுத்தி வரும் செல்லியல் தகவல் ஊடகத்தின் செய்திகளை இனி நோக்கியா எக்ஸ் பயனர்களும் பதிவிறக்கம் செய்து, படித்துப் பயனடையலாம்.