Home கலை உலகம் 675 திரையரங்குகளில் நாளை வெளியாகும் ‘மான் கராத்தே’

675 திரையரங்குகளில் நாளை வெளியாகும் ‘மான் கராத்தே’

834
0
SHARE
Ad

rsz_maankarateசென்னை, ஏப்ரல் 3 – எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்  பி.மதன்,  ஏஆர்.முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘மான் கராத்தே’ படம் உலகம் முழுவதும் மொத்தம் 675 திரையரங்குகளில் நாளை வெளியாகிறது.

புதுமுக இயக்குநர் திருக்குமரன் இயகக்த்தில், அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்களும் தற்போது பட்டி தொட்டியெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க, படமோ நாளை ஏப்ரல் 4-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்டு விட்டது.

#TamilSchoolmychoice

அதிலும், சாதனைப் படைக்கும் விதமாக, அமோக வரவேற்பை பெற்றுள்ள மான் கராத்தே படத்தை வெளியிட,

வினியோகஸ்தர்களும் பெரும் ஈடுபாடு காட்டியதால் தான் 675 திரையரங்குகளில் வெளியாகிறது என்கிறார் தயாரிப்பாளர் மதன். ‘மான் கராத்தே’படத்தின் முதல் காட்சி திரைவிமர்சனத்தை செல்லியலில் நாளை படிக்கலாம்.