Home நாடு அடுத்த 10 ஆண்டுகளில் 100 விமானங்களை வாங்க மலிண்டோ திட்டம்!

அடுத்த 10 ஆண்டுகளில் 100 விமானங்களை வாங்க மலிண்டோ திட்டம்!

509
0
SHARE
Ad

B739-9M-LNF-MALINDO-AIR-e1381482420408சுபாங் ஜெயா, ஏப்ரல் 11 – விமானச் சேவையை விரிவுபடுத்தவும், பயணிகளின் வசதிக்காவும் வரும் பத்தாண்டுகளில் 100 விமானங்களை வாங்க மலிண்டோ எண்ணம் கொண்டுள்ளதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி சந்திரன் கூறினார்.

இதனிடையே, நேற்று முன்தினம் பிரான்சில் தயாரிக்கப்பட்ட அதிநவீன புதிய விமானம் ஒன்றை மலிண்டோ வாங்கியுள்ளது. சுபாங் ஜெயாவிலுள்ள விமான நிலையத்தில் “ஏடிஆர்” 72-600 ரக விமானத்தைப் பெற்றுக் கொண்டதாக மலிண்டோ ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

உள்ளூர், வெளிநாடுகளுக்கு சேவைகளின் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் இந்த சிறப்பு வரவாக அமைந்திருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

அடுத்த பத்து ஆண்டுகளில் 100 விமானங்களை வாங்குவதை இலக்காவும் மலிண்டோ நிறுவனம் கொண்டுள்ளது. மேலும் பல நாடுகளுக்கு மலிண்டோ சேவையை தொடர உள்ளதாகவும் சந்திரன் தெரிவித்தார்.