கோலாலம்பூர், ஏப்ரல் 11 – அண்மையில் காணாமல் போன எம்.எச் 370 விமானம் விவகாரத்தைத் தொடர்ந்து 2015 – ம் ஆண்டு வரையில் மலேசியாவுக்கு சுற்றுலாப் பயணம் வரவிருந்த 30,000 சுற்றுலா பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளதாக சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஜித் அறிவித்தார்.
இதனிடையே, மலேசியா சுற்றுலாத் துறைக்கு எந்த பாதிப்பும் வரவில்லை என்றும் ஜனவரி, பிப்ரவரிஆகிய மாதங்களுக்குப் பிறகு அதாவது மார்ச் 8 -ம் தேதிக்குப் பிறகு சீன சுற்றுப் பயணிகளின் வருகை மிகவும் குறைந்துள்ளதாகவும் சொன்னார்.
மார்ச் 8 ஆம் தேதி காணாமல் போன மாஸ் விமானமத்தில் 150 பேர் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது சுற்றுலா பிரச்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு 6 லட்சம் சீன நாட்டு சுற்றுப் பயணிகள் மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளனர் என்று நஸ்ரி கூறினார்.