Home கலை உலகம் என் வழி ரஜினி வழி – சூர்யா!

என் வழி ரஜினி வழி – சூர்யா!

484
0
SHARE
Ad

rajinihomeசென்னை, ஏப்ரல் 14 – சினிமாவில் என் வழி ரஜினி வழிதான் என்று கூறியுள்ளார் முன்னணி நடிகர் சூர்யா. போட்டியும் பொறாமையும் நிறைந்த சினிமாவில்,

தனக்கு அடுத்த தலைமுறை நடிகர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான விஷயங்களை சொல்லித் தருவதில் ரஜினிக்கு நிகர் அவர்தான்.

விஜய்யை அழைத்து, வெறும் காதல் படங்கள் மட்டும் பண்ணாமல் ஆக்ஷன் படங்களும் பண்ணுங்கள் உங்களுக்கு செட் ஆகும் என அறிவுறுத்தியவர் ரஜினிதான்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து தோல்விப் படங்களால் துவண்டிருந்த அஜீத்தை அழைத்து, ஒரு படம் வில்லனா பண்ணுங்கள் உங்க வளார்ச்சி மீண்டும் சரியாக வரும் என்று கூறி அவருடைய திரை வாழ்க்கையையே சீராக்கிய பெருமை ரஜினிக்கு உண்டு.

வளரும், இளம் நடிகர்கள் அனைவருக்கும் ரஜினி சொல்லும் அறிவுரை, ஒரே நேரத்தில் நான்கைந்து படங்கள் பண்ணுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது என்பதுதான். நடிகர் சூர்யாவுக்கும் இப்படியொரு அறிவுரையை, யோசனையை வழங்கியுள்ளார் ரஜினி.

இதுகுறித்து நடிகர் சூர்யா கூறுகையில், “ஒரு முறை நான் விமானத்தில் பயணித்தபோது, அதில் ரஜினி சார் மற்றும் பிரகாஷ் ராஜைச் சந்தித்தேன். அப்போது ‘சூர்யா, உங்களுக்கு சென்டிமென்ட், ஆக்ஷன் இரண்டுமே நன்றாக வருகின்றன.

ஒரு படம் அப்படி, ஒரு படம் இப்படி என மாற்றி மாற்றி பண்ணுங்கள். நன்றாக வரும்’ என்றார். அவர் சொன்னது போலத்தான் எனக்கு படங்களும் அமைகின்றன. சினிமாவில் அவர் வழிதான் என்னுடையதும்,” என்று சூரியா குறிப்பிட்டுள்ளார்.