Home 13வது பொதுத் தேர்தல் பிஎஸ்எம் அடையாளச் சின்னம் மக்களுக்குக் குழப்பம் தரலாம்-அன்வார் சாடல்

பிஎஸ்எம் அடையாளச் சின்னம் மக்களுக்குக் குழப்பம் தரலாம்-அன்வார் சாடல்

526
0
SHARE
Ad

psmகோலாலம்பூர், பிப்.15- பார்தி சோசலிஸ் மலேசியா (பிஎஸ்எம்)-வின் கைமுட்டிச் சின்னம், மாற்றரசுக் கட்சியின் தேர்தல் பரப்புரையின்போது பயன்படுத்தப்படுவதற்கு அவ்வளவு பொருத்தமானதாக இருக்காது  என்று கருதுகிறார் பக்காத்தான் ரக்யாட் பெருந்தலைவர் அன்வார் இப்ராகிம்.

“கடந்த மாதம் சுங்கை சிப்புட் சென்றிருந்தேன். அதன்(கைமுட்டிச் சின்னம்) தொடர்பில் அங்கு குழப்பம் நிலவுவதைக் கண்டேன். அதைப் பார்த்து பலமாதிரியாக கருத்துகள் வெளீயாகின்றன.

“அது கம்முனிஸ்டுகளுடன் சே குவாரா-வுடன் மாவோ செடொங்-உடன் தொடர்புடையது போல உள்ளது.

#TamilSchoolmychoice

“அதனால் இதைப் பற்றி பிஎஸ்எம்முடன் மீண்டும் விவாதித்து நல்ல தீர்வு காணப்பட வேண்டும்”.

நேற்று ஷா ஆலமில் நடைபெற்ற கேள்வி-பதில் அங்கத்தின்போது அன்வார் இவ்வாறு கூறினார்.

தமிழ் நாளேட்டின் ஆசிரியர் ஒருவர், பிஎஸ்எம்-மை நான்காவது பங்காளிக்கட்சியாக பக்காத்தான் சேர்த்துக்கொள்ளுமா என்று வினவியதற்கு பதிலளித்த அன்வார் அவ்வாறு கூறினார்.

அந்நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்கள் அதன் தொடர்பில் மேலும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினாலும் அன்வார் அது பற்றி விவரிக்கவில்லை.

பிஎஸ்எம், பக்காத்தான் கூட்டணியில் சேர விரும்பிக் கடந்த செப்டம்பர், மாதமே அதற்காக விண்ணப்பம் செய்தது. ஆனால், இதுவரை பக்காத்தானிடமிருந்து பதில் இல்லை என்று பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ்.அருள்செல்வன் கூறியுள்ளார்.

இம்மாதத் தொடக்கதில் அது பற்றிக் குறிப்பிட்ட அன்வார், பக்காத்தான் தலைமைத்துவம் விரைவில் அது பற்றி முடிவு செய்யும் என்று தெரிவித்திருந்தார்.

நேற்று அது பற்றிக் குறிப்பிட்ட அன்வார், முதலில் அந்த சோசலிசக் கட்சி அதன் ஆண்டுக்கூட்டத்தில் பக்காத்தான் கூட்டணியில் சேர்வதற்கான விருப்பத்தை விளக்கி அதற்கான இணக்கத்தைப் பெற வேண்டும் என்றார்.

அத்துடன், பக்காத்தானின் கொள்கைகளை அது   “முழுமையாக ஏற்கவும்” வேண்டும். இரு தரப்புக்குமிடையில் நல்லுறவு நிலவுவதால் விரைவிலேயே ஒரு தீர்வு காணப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.