பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 14 – ஐஜெஎம் நிறுவனத்தின் பெஸ்ராயா ஈஸ்டர்ன் எக்ஸ்டென்சன் நெடுஞ்சாலை (Besraya Eastern Extension) நாளை திறக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் டத்தோ தே கியான் மிங் அறிவித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த நெடுஞ்சாலைத் திட்டத்திற்காக அரசாங்கம் 216.05 மில்லியன் நிதியை ஐஜெஎம் நிறுவனத்திடம் வழங்கியது.
“இந்த திட்டத்திற்கு ஐஜெஎம் மொத்தம் 700 மில்லியன் நிதி செலவிட்டுள்ளது. இந்த செலவு கட்டுமானத்திற்கு மட்டும். இதில் பிஇஇ திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு இதில் சேர்க்கப்படவில்லை” என்று தே கியாங் மிங் தெரிவித்துள்ளார்.
இந்த நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 12.34 கிலோமீட்டர் என்றும் தே கியாங் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஐஜெஎம் நிறுவனத்திடம் நியூ பந்தாய் எக்ஸ்பிரஸ் வே, பெஸ்ராயா ஹைவே, லெபுராயா காஜாங் – சிரம்பான் மற்றும் குவாந்தான் போர்ட் ஆகிய நெடுஞ்சாலைகள் கட்டுமான குத்தகை உள்ளது குறிப்பிடத்தக்கது.