Home வணிகம்/தொழில் நுட்பம் ஐஜெஎம்: 1.12 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இலகு இரயில் திட்டம் 3-இன் நிலத்தடி பணிகள் நிறுத்தம்!

ஐஜெஎம்: 1.12 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இலகு இரயில் திட்டம் 3-இன் நிலத்தடி பணிகள் நிறுத்தம்!

759
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1.12 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இலகு இரயில் திட்டம் 3-இன் (எல்ஆர்டி 3) நிலத்தடி பணிகளுக்கான ஐஜெஎம் கார்பரேஷன் பெர்ஹாட் நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதாக அது தெரிவித்துள்ளது.

பர்சா மலேசியாவுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ள அறிக்கையில், அதன் முழு உரிமையாளரான ஐஜெஎம் கன்ஸ்ட்ராக்க்ஷன் செண்டெரியான் பெர்ஹாட்டுக்கு (ஐஜெஎம்சி), எம்ஆர்சிபி ஜார்ஜ் கென்ட் செண்டெரியான் பெர்ஹாட்டிடமிருந்து ஜூலை 8-ஆம் தேதி பணிநீக்கம் குறித்த அறிவிப்பைப் பெற்றாக தெரிவித்துள்ளது.

ஐஜெஎம்சிக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு  மார்ச் 13-ஆம் தேதி இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடைநிறுத்தப்படுவதற்கு முன்னதாகவே தொடங்கப்பட்டுவிட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.   

#TamilSchoolmychoice

ஐஜெஎம்சி தற்போது அதன் ஆலோசகர்களுடன் ஆலோசித்து வருகிறது. மேலும், ஒப்பந்தத்தின் கீழ் தகுந்த சட்டரீதியான தீர்வைப் பெறும்என்றும் அது கூறியுள்ளது.