இந்நிலையில், இப்படத்தின் முக்கியமான தகவல் அண்மையில் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் விஜய் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாட உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இதுவே முதல் முறையாக நடிகர் விஜய் பாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், இயக்குனர் அட்லி மற்றும் பாடலாசிரியர் விவேக் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பாடலாசிரியர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் பாடும் வெறித்தனம் பாடலுக்கு விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளார். விஜய் இப்படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார். நயன்தாரா, யோகி பாபு, விவேக், சிந்துஜா, கதிர் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. கடந்த வாரம் இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி, இரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ளது.