பினாங்கு, ஏப்ரல் 16 – எதிர்வரும் 14 -வது பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு பினாங்கு மாநிலத்தின் புதிய தேசிய முன்னணி தலைவராக தெங் சாங் இயோ (படம்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அரசியலில் நன்கு அறிமுகமானவரும், இளைமையாளருமான தெங் பினாங்கு மாநிலத்தில் சுறுசுறுப்புடன் தேமுவை நன்றாக வழிநடத்துவார் என்று சுகாதாரத் துறை துணையமைச்சர் யாஹ்யா தெரிவித்தார்.
பினாங்கு மாநிலத்தின் தேமு தலைவராக நியமிக்கப்பட்டதற்கான உறுதிக் கடிதத்தை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிடம் இருந்து கடந்த செவ்வாய்கிழமை தெங் பெற்றார்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய தெங், அம்மாநில கெராக்கான் தலைமைச் செயலாளர் மற்றும் தேமு தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
கடந்த 2012 ம் ஆண்டு, அப்போதைய கெராக்கான் தலைவர் டான்ஸ்ரீ கோ சூ கூன் – க்கு பதிலாக மாநில தேசிய முன்னணி தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.