தி ஹேக், ஏப்ரல் 16 – சிரியாவில் இருந்து விஷவாயு மற்றும் மயக்க மருந்து உள்ளிட்ட இரசாயன ஆயுதங்கள் பெருமளவில் அகற்றப்பட்டு விட்டதாக சர்வதேச இரசாயன ஆயுத கண்காணிப்பு மையம் (OPCW) அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு கூறியிருப்பதாவது, “உள்நாட்டுப் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட சிரியாவில், லடாகியா துறைமுகத்தில் இருந்து, கப்பல் மூலம் இரசாயன ஆயுதங்கள் கொண்ட 13வது தொகுப்பு. நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) கொண்டு செல்லப்பட்டன.
மொத்தமுள்ள இரசாயன ஆயுதங்களில் 65 சதவீதம் அகற்றப்பட்டு விட்டது” என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. இரசாயன ஆயுதங்களை அகற்றுவதில், சிரியாவின் பங்கு மகத்தானது என இரசாயன ஆயுதத் தடை அமைப்பின் தலைவர் அகமது உசும்கு பாராட்டியுள்ளார்.
மேலும் அவர் இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதிக்குள் மொத்தமுள்ள இரசாயன ஆயுதங்களும் அகற்றப்பட வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார்.