Home கலை உலகம் ஊர் சுற்றி பொழுதை கழிக்கும் அசின்!

ஊர் சுற்றி பொழுதை கழிக்கும் அசின்!

618
0
SHARE
Ad

Asinசென்னை, ஏப்ரல் 16 – இளம் நாயகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று அசின் அளித்த பேட்டி, பாலிவுட்டில் அவரது மார்க்கெட்டை படுபாதாளத்துக்கு தள்ளிவிட்டது.

இளம் நடிகர்களான ரன்பீர் கபூர், சாஹித் கபூர் போன்றவர்கள் அசினை கண்டுகொள்ளாமல் விட்டனர். சோனாக்ஷி சின்ஹா, சோனம் கபூர், அனுஷ்கா ஷர்மா போன்றவர்களை சுற்றியே பட வாய்ப்புகள் சுழல்கிறது.

இதையடுத்து கேரளாவில் உள்ள பண்ணை தோட்டம் மற்றும் தனக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு சென்று பொழுதை கழிக்கிறார் அசின். சமீபத்தில் இந்தோனேசியாவில் பாலி தீவுக்கு சென்ற அவர் அங்குள்ள கடற்கரை பகுதி அறை எடுத்து தங்கி பொழுதை கழிக்கிறார்.

#TamilSchoolmychoice

இதுபற்றி அசின் கூறும்போது, நான் ஒரு நீர்பறவை. எனக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு சென்று பொழுதை கழித்துவருகிறேன். மேலும் சாகச விளையாட்டு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். தற்போது ஆல் ஈஸ் வெல் என்ற ஒரே ஒரு இந்தி படத்தில் மட்டும் நடித்து வருகிறேன் என அசின் கூறினார்.