கோலாலம்பூர், ஏப்ரல் 16 – மஇகா தேர்தலில் நடந்த முறைகேடுகளால் அக்கட்சியின் சங்கப்பதிவு ரத்து செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக ம.இ.கா முன்னாள் இளைஞர் பகுதி துணைத் தலைவர் முகிலன் அனுப்பிய குறுந்தகவல் அக்கட்சி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2013 -ம் ஆண்டு, நவம்பர் மாதத்தில் மலாக்காவில் நடைபெற்ற ம.இ.கா தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக பல புகார்கள் கூறப்பட்டன.
இந்நிலையில் முகிலன் “வாட்ஸ் அப் அரசியல்” என்ற பெயரில் குறுந்தகவல் அனுப்பிள்ளதாக பண்டான் ம.இ.கா தொகுதி செயலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
மஇகா தேசியத் தலைவர் பழனிவேல், துணைத் தலைவர் சுப்பிரமணியம் உட்பட மஇகாவைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் இந்த வாட்ஸ் அப்பில் தளத்தில் உள்ளனர்.
முகிலன் குறிப்பிட்ட இந்த குறுந்தகவல் மஇகாவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செய்தி பற்றி முகிலன் கூறியதாவது, இந்த குறுந்தகவல் விளையாட்டாக அனுப்பியதாகவும் மஇகாவின் முடிவு படி மறு தேர்தல் நடைபெறாது எனவும் சொன்னார்.