Home கலை உலகம் மனீஷா கொய்ராலாவின் வாழ்க்கையும் படமாகிறது!

மனீஷா கொய்ராலாவின் வாழ்க்கையும் படமாகிறது!

487
0
SHARE
Ad

manishakoirala..டெல்லி, ஏப்ரல் 16 – சில காலமாக நடிகைகளின் வழ்க்கையை படமாக எடுத்துவருகிறார்கள். அப்படி ஒரு படம்தான் தென்னிந்திய நடிகையான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை இந்தியில் த தர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் படமாக்கினர்.

ஆரம்பத்தில் கவர்ச்சி நடிகையின் வாழ்க்கையை படமாக்குவதா? என்று எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அதில் நடித்த வித்யாபாலனையும்  சில அமைப்புகள் விமர்சித்தன.

ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் சில்க் வேடத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்ததோடு அவரது வாழ்க்கையில் அது முக்கியமான படமானது.

#TamilSchoolmychoice

இதையடுத்து, அப்படத்தை சிலம்பாட்டம் சனாகானின் நடிப்பில் தமிழிலும், மலையாளத்திலும் படமாக்கினர். இந்த நிலையில், தற்போது பிரபல இந்தி நடிகையான மனீஷா கொய்ராலாவின் வாழ்க்கையையும் படமாக்கும் முயற்சி நடக்கிறது.

இந்தியில் தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கில் மொழிபெயற்கப்பட உள்ளதாம். மேலும், மனீஷா கொய்ராலா சினிமாவில் நடிகையானது முதல், அவர் 2010-ல் சாம்ராட் தஹால் என்ற தொழிலபதிபரை திருமணம் செய்து கொண்டது. பின்னர் இரண்டே வருங்களில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தது.

அதையடுத்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனீஷா, அதை எதிர்த்து போராடிக் கொண்டிருப்பது வரையிலான முக்கிய அம்சங்கள் அப்படத்தில் இடம்பெறுகிறதாம். இப்படத்திலும் வித்யாபாலன்தான் நடிப்பார் என்று செய்திகள் பரவியபோதும், இன்னும அது உறுதிப்படுத்தப்படவில்லை.