Home நாடு கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!

கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!

595
0
SHARE
Ad

Karpal-Singhஏப்ரல் 17 – பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் கம்பார் அருகில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.

விபத்து நடந்த இடத்திலேயே, அந்த தருணத்திலேயே கர்ப்பாலும் அவருடன் பயணம் செய்த  அவருடைய உதவியாளர் சி.மைக்கல் என்பவரும் உயிரிழந்தனர்.

கர்ப்பாலின் மகன் ராம் கர்ப்பால்  மற்றும் கர்ப்பாலின் வாகன ஓட்டுநர் சி.செல்வம் ஆகிய இருவரும் அதே விபத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

#TamilSchoolmychoice

பினாங்குக்கு வழக்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கர்ப்பால் சிங் சென்று கொண்டிருந்த வழியில் அவர் சென்ற அல்பார்ட் ரக வாகனம் ஒரு லாரியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.

மரணமடைந்தவர்களின் உடல்கள் கம்பார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கர்ப்பாலின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். ஜசெக ஆதரவாளர்களும், குடும்ப நண்பர்களும், உறவினர்களும் மருத்துவமனையில் குழுமியுள்ளனர்.

(மேலும் செய்திகள் தொடரும்)