Home நாடு கர்ப்பால் சிங்கின் அஸ்தி பினாங்கு கடலில் கரைக்கப்பட்டது

கர்ப்பால் சிங்கின் அஸ்தி பினாங்கு கடலில் கரைக்கப்பட்டது

545
0
SHARE
Ad

Karpal-300-x-200பினாங்கு, ஏப்ரல் 24 – சாலை விபத்தில் மரணமடைந்த கர்ப்பால் சிங்கின் அஸ்தி பினாங்கு மாநிலத்திலுள்ள தஞ்சோங் தோக்கோங்கிலுள்ள கடற்கரையில் நேற்று கரைக்கப்பட்டதாக அவரின் மகன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அஸ்தி கடலில் கரைக்கப்பட்டபோது கடல் மிகவும் அமைதியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் கடந்த ஞாயிறன்று கர்ப்பாலின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடி அஞ்சலி செலுத்தியது எங்களை மிகவும் பெருமைப்பட வைத்துள்ளது என கர்ப்பாலின் மனைவி குர்மிட்கவுர் தெரிவித்தார்.

டேவான்ஸ்ரீ பினாங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட கர்ப்பாலின் நல்லுடலுக்கு  இவ்வளவு மக்கள் கூடி அஞ்சலி செலுத்தியது எங்களை மிகவும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தனது கணவரின் அரசியல் செல்வாக்கும் மற்றும் பழக்க வழக்கங்கள் தான் இவ்வளவு பெரிய கூட்டம் திரண்டதற்கு காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும் குர்மிட் கவுர் தனது குடும்பத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.