பெர்த், ஏப்ரல் 24 – காணமல் போன எம் எச் 370 மாஸ் விமானம் தொடர்பான தேடுதல் பணிகள் மோசமான வானிலை காரணமாக நேற்று காலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.
இருப்பினும் இந்த முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பாக 3 தேடுதல் விமானங்கள் தேடுதல் பணிகளுக்காக கடல் மார்க்கமாக சென்று விட்டதாக கூட்டு தேடுதல் மையம் ஓர் அறிக்கையில் இன்று தெரிவித்தது.
ஆக்ரோஷமான கடல் அலைகளாலும், மிகவும் குறைவான பார்வை திறன் கொண்ட சூழ்நிலையாலும், ஆகாய மார்க்கமாக தேடுதல் பணிகள் எதிர்பார்த்த பலனை தராது என்பதாலும் இது போன்ற நிலைமைகளில் தேடுதல் பணிகள் தொடர்வது ஆபத்தானது என்பதாலும் தேடுதல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கடல் மார்க்கமாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள 12 கப்பல்கள் தங்களின் பணிகளை தொடர்கின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.