கோலாலம்பூர், ஏப்ரல் 24 -பிகேஆர் கட்சியின் ஆலோசகரும் எதிர்க்கட்சித் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அந்தக் கட்சியின் தேசியத் தலைவருக்கான போட்டியிலிருந்து விலகியதற்கான காரணம் கடந்த மார்ச் 7ஆம் தேதி அவர் மீது விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை தான் என நடப்பு பிகேஆர் கட்சித் தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா கூறினார்.
அன்வார் இப்ராகிம் தேசியத் தலைவர் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளும் முடிவு மேல் முறையீடு நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவாகும்.
அதோடு சங்கப் பதிவதிகாரியின் கட்டுப்பாடுகளும் ஒரு காரணமாகும் என நேற்று பிகேஆர் கட்சித் தலைமையகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வான் அசிசா கூறினார்.
இருப்பினும் அன்வார் தனது மறுமலர்ச்சிக்கான போராட்டங்ளை தொடந்து நடத்துவார் என வான் அஸிசா உறுதியளித்தார்.
இதற்கிடையில், அன்வார் தலைவர் பதவிக்கு போட்டியிட்டது, வேறு சில தலைவர்களை கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதிலிருந்து தடுக்கும் ஓர் அரசியல் வியூகம் என்பதை வான் அஸிசா மறுத்துள்ளார்.
பிகேஆர் கட்சித் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் முன்னேற்பாடுகள் குறித்தும் வான் அசிசா இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அசிசா திருப்தி தெரிவித்தார்.
எதிர்வரும் ஏப். 26 முதல் மே 11 வரை பிகேஆர் கட்சியின் தொகுதி மற்றும் தேசியப் பதவிகளுக்கான உட்கட்சித் தேர்தல்கள் நடைபெறும்.