Home India Elections 2014 ஜெயலலிதா-சோனியா மோதலே மீனவர் பிரச்சனைக்குக் காரணம் – நரேந்திர மோடி!

ஜெயலலிதா-சோனியா மோதலே மீனவர் பிரச்சனைக்குக் காரணம் – நரேந்திர மோடி!

545
0
SHARE
Ad

modiசென்னை, ஏப்ரல் 18 – தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருவரிடையிலான மோதலே காரணம் என்று பா.ஜ.க. பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.

மீனவர்களைப் பாதுகாக்க மத்தியில் வலுவான அரசு அமைய வேண்டும். அத்தகைய வலிமையான அரசு அமைய தமிழக மக்கள் துணைநிற்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

கன்னியாகுமரியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, இந்தத் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் இடையே நடக்கும் போட்டியல்ல.

#TamilSchoolmychoice

இது மக்கள் சேர்ந்து நடத்தும் ஒரு போராட்டம். காங்கிரஸ் கட்சி, தான் செய்த தவறுகளுக்கான பலனை அனுபவித்தாக வேண்டும். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளிடமிருந்து மக்கள் விடுபடாவிட்டால் தமிழகத்துக்கு விமோசனம் கிடையாது. தமிழகத்துக்கு இப்போது ஒரு மாறுதல் தேவைப்படுகிறது.

நேற்று இதே மைதானத்தில் பேசிய சோனியா காந்தி, மீனவர்களுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருவதாகக் கூறினார். ஆனால், தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசும், மாநில அரசும் பரஸ்பரம் ஒன்றையொன்று குற்றம் சொல்கின்றன.

அதாவது, அம்மா, சோனியா மீதும், சோனியா, அம்மா மீதும் குறைகூறி வருகிறார்கள். இவர்களின் மோதலால் மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்துத் துன்புறுத்தியும், சிறைப்படுத்தியும் வருகிறார்கள்.

மீனவர்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டுமானால் இந்தியாவில் வலுவான அரசு அமைய வேண்டும். மீனவர்கள் வாழ்வு சிறக்க நான் ஒரு சபதம் எடுக்கிறேன்.

இன்றைய அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி மீனவர்களுக்காக நன்மை செய்ய உறுதி எடுத்துள்ளேன் என மோடி தனது தேர்தல் பிதச்சாரத்தில் கூறியுள்ளார்.