Home கலை உலகம் கதாநாயகனின் உதட்டை கடித்து காயப்படுத்திய நடிகை – கங்கானா ரனாவத்!

கதாநாயகனின் உதட்டை கடித்து காயப்படுத்திய நடிகை – கங்கானா ரனாவத்!

640
0
SHARE
Ad

Kangana-Ranautமும்பை, ஏப்ரல் 18 – தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் உள்பட பல இந்தி  படங்களில் நடித்துள்ளவர் கங்கானா ரனாவத்.

பிரபல பாலிவுட் இயக்குனர் சாய் கபீர் இயக்கத்தில்  ரிவால்வர் ராணி திரைப்படத்தில் நடித்து உள்ளார். இத்திரைப்படம்  வரும் 25-ஆம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தில் கங்கனா ரனாவத், பியூஷ் மிஸ்ரா, வீர் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள படம் இது. கங்கானா  ரனாவத்திற்கு இது திருப்பு முனையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இதில் கங்கனா ரனாவத்துக்கும், வீர் தாஸும் உதட்டுடன் உதடு  முத்தமிடும் காட்சி எடுக்கப்பட்டது.

கங்கனா ரனாவத் முத்தக் காட்சியில் நடிக்க தயாராக இருந்தார். ஆனால் வீர் தாஸ் மிகவும் தயக்கத்துடனே காணப்பட்டார். அவருக்கு கங்கனா தைரியம் கொடுத்து நடிக்க வைத்தாராம்.

ஆனால் காட்சி சரியாக வரவில்லை என்று இயக்குனர் அதிருப்தியடைந்தார். பொறுத்து பொறுத்து பார்த்த கங்கனா, அடுத்த காட்சியில் முத்தம் கொடுத்த போது வீர் தாஸின் உதட்டை கடித்து காயப்படுத்திவிட்டாராம்.

வீர் தாஸின் உதட்டில் ரத்தம் வந்ததால், அன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு பின்னர் ஒருவாரம் கழித்து அதே காட்சியை மீண்டும் படமாக்கியுள்ளனர்.