Home நாடு கர்ப்பாலின் மறைவு சட்டத்துறைக்கு பேரிழப்பு -அன்வார்

கர்ப்பாலின் மறைவு சட்டத்துறைக்கு பேரிழப்பு -அன்வார்

528
0
SHARE
Ad

karpalபெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 18 – ஜசெக தலைவர் கர்ப்பால் சிங் நேற்று அதிகாலை 1.10 மணிக்கு விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார் என்ற செய்தியால் மின்னல் தாக்கியது போன்ற உணர்வுக்கு தாம் ஆளாகியிருப்பதாகவும், அவரின் மறைவு சட்டத்துறைக்கு பேரிழப்பாகவும் உள்ளது என்றார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.

விபத்தில் உயிரிழப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் கர்ப்பாலை தாம் சந்தித்ததாகவும் அன்வார் வேதனையுடன் குறிப்பிட்டார். மேலும், அதிகாலை 3 மணிக்கு கர்பால் உயிரிழந்தார் என்ற செய்தி தனக்கு தெரிவிக்கப்பட்டது.

முதல் நாள் மாலையில் அவருடன் பேச்சு நடத்திய தமக்கு இந்த செய்தி பேரிடியாக இருந்தது என்றார் அன்வார். ஜெலுத்தோங் சிங்கம் என வருணிக்கப்படும் கர்ப்பால், அநீதிக்கும் அடக்குமுறைக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் என்றும், இவரின் மறைவு சட்டத்துறைக்கு பெரும் இழப்பாகும் என்றும் கூறினார்.

#TamilSchoolmychoice

கோழை பல முறை இறக்கிறான். ஆனால் வீரன் ஒரு முறை தான் மரணமடைகிறான்.  ஒரு வீரனாகவே கர்ப்பால் மறைந்துள்ளார். ஒரு நல்ல நண்பரையும், தலைவரையும் இழந்துவிட்டேன்.

தமது எல்லா வேலைகளையும் நிறுத்திவிட்டு எனது மேல்முறையீடு குறித்து அடுத்த இரு நாட்களில் கவனம் செலுத்தப்போவதாக கர்ப்பால் தம்மிடம் தெரிவித்தாகவும் அன்வார் சொன்னார்.

கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் தமது போராட்டத்திற்கு கர்ப்பால் எப்போதும் துணையாக இருந்து வந்ததையும் அன்வார் வேதனையுடன் தெரிவித்தார்.