Home நாடு நான் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வர வேண்டும் கர்ப்பால் சிங்கின் கடைசி வார்த்தை – லிம்...

நான் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வர வேண்டும் கர்ப்பால் சிங்கின் கடைசி வார்த்தை – லிம் குவான் எங்

451
0
SHARE
Ad

Lim Guan Engஈப்போ, ஏப்ரல் 18 – தான் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வர வேண்டும் என்பதுதான் சம்பவத்திற்குச் சில நாட்களுக்கு முன்னதாக கர்ப்பால் சிங் தம்மிடம் கூறிய கடைசியான வார்த்தை என்று பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரான கர்ப்பால் மீது வெ.4,000 அபராதம் விதிக்கப்பட்டதால் அதைப் பற்றி கலந்துரையாடல் நடத்தும் பொருட்டு, தாம் கர்ப்பாலுடன் நீண்ட நேரத்தை ஒதுக்கியதாக லிம் குறிப்பிட்டார்.

தீர்ப்பு குறித்து கர்ப்பால் இந்த வாரத்தில் மேல்முறையீடு செய்ய இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அண்மையில் ஜசெக தலைவர் பதவியிலிருந்து விலகி கொள்வதாக கூறியதை கட்சி தவறான முறையில் எடுத்துக் கொண்டது.

#TamilSchoolmychoice

எனவே அவர் மீண்டும் திரும்பி வரும் வரை அப்பதவி காலியாகவே இருக்கும் என்று லிம் கூறினார். ஆகவே  நீதிமன்றத்தின் மேல் முறையீட்டிற்கு காத்திருக்கும் வரை தாம் ஜசெகவின் தற்காலிக தலைவராக தொடர்ந்து இருப்பதற்கு விலக்களிப்பு வழங்க சங்கங்களின் பதிவு அலுவலகத்திடம் மேல்முறையீடு செய்வதற்கு கர்ப்பால் மறுத்துவிட்டார்.

அவர் கட்சிக்கு பாராட்டு தெரிவித்ததோடு “கவலைப் பட வேண்டாம் லிம் நான் கட்டாயம் திரும்பி வருவேன்” என்று தம்மிடம் கூறியதாக லிம் குறிப்பிட்டார்.