Home உலகம் நெடியவன் உட்பட 96 இலங்கையர்களைக் கைது செய்ய இண்டர்போல் எச்சரிக்கை

நெடியவன் உட்பட 96 இலங்கையர்களைக் கைது செய்ய இண்டர்போல் எச்சரிக்கை

507
0
SHARE
Ad

LTTE 440 x 215கொழும்பு, ஏப்ரல் 18 – இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் குறித்த சர்ச்சைகள் புறப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச தலைவர் என்று கூறப்படும் நெடியவன் உட்பட 96 இலங்கையர்களை கண்ட இடத்தில் கைது செய்வதற்காக இன்டர்போல் எனப்படும் அனைத்துல காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த 96 பேரில் 40 பேர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொணடவர்கள் என்றும் ஏனைய 56 பேரும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்கள் எனவும் இலங்கை காவல் துறையின் தகவல் ஊடகத் தொடர்பாளரான  அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் இன்றுவரை கைது செய்யப்பட்ட 100பேர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே புலிகள் இயக்கத்தின் சர்வதேச தலைவர் என்று கூறப்படும் நெடியவன் என்பவர் தற்போது நார்வேயில் மறைந்திருப்பதாக இலங்கை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவலை அடுத்தே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க நெடியவன் முயற்சித்து வருவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெடுங்கேணியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் மூவரும் நெடியவனின் ஆலோசனைப்படியே செயற்பட்டு வந்துள்ளனர் என்றும் இலங்கை புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் சிறையில் இருக்கும் 6 விடுதலைப் புலிகளையும் ஒப்படைக்க வேண்டும் என்றும் இண்டர்போல் மூலம் இலங்கை அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.