Home India Elections 2014 துளசிராம் கொலை வழக்கில் மோடி முக்கிய குற்றவாளி – கபில்சிபல் குற்றச்சாட்டு

துளசிராம் கொலை வழக்கில் மோடி முக்கிய குற்றவாளி – கபில்சிபல் குற்றச்சாட்டு

626
0
SHARE
Ad

Kapilபுதுடெல்லி, ஏப்ரல் 22 – துளசிராம் பிரஜாபதி கொலை வழக்கில் மோடி முக்கிய  குற்றவாளி என்று மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல்  குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம்  செய்த மோடி, குற்றவாளிகளை அப்புறப்படுத்தி, அரசியலை தூய்மைப்  படுத்துவேன்’ என்று பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய சட்ட  அமைச்சர் கபில்சிபல், ‘குஜராத் மாநிலத்தில், துளசிராம் பிரஜாபதி  போலி துப்பாக்கி சூட்டில் (என் கவுண்டரில்) கடந்த 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி  கொல்லப்பட்டார்.

சொராபுதின் மற்றும் கவுசர்பி கொலை வழக்கில்  பிரஜாபதி முக்கிய சாட்சியாவார். பிரஜாபதியை கொலை செய்ய பாரக்  ஷாவுக்கும் ராஜ்குமார் பாண்டியனுக்கும் இடையே நடைபெற்ற  உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சந்தர்ப்ப சாட்சியங்களை  வைத்து பார்க்கும்போது, இக்கொலை முதல்வர் அலுவலகத்திற்கு  தெரிந்தே நடந்துள்ளது. எனவே, பிரஜாபதி கொலை வழக்கில் மோடி  ஒரு முக்கிய குற்றவாளி ஆவார்’ என்று கூறியுள்ளார்.

கபில்சிபலின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த  பாஜ செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி, ‘நாடாளுமன்றத் தேர்தலில்  முக்கிய பிரச்சனைகளை திசை திருப்புவதற்காக மோடி மீது குற்றம்  சுமத்துகின்றனர்.

சில  கொலைகளை பேசுவதன் மூலம் காங்கிரஸ் உண்மையான  பிரச்சனைகளை திசை திருப்புகிறது’ என்று கூறியுள்ளார் பாஜ செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி.