Home India Elections 2014 வாரணாசியில் இன்று மோடி வேட்புமனு தாக்கல்!

வாரணாசியில் இன்று மோடி வேட்புமனு தாக்கல்!

481
0
SHARE
Ad

modi1 (1)வாரணாசி, ஏப்ரல் 24 – இந்தியாவிலேயே அதிகமான மக்களவைத் தொகுதிகள் உள்ள உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில், பா.ஜ.க பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பினை அளிக்க, உ.பி., மாநில பா.ஜ வினர் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்துக்களின் புனித நகரமான காசி அமைந்துள்ள வாரணாசி தொகுதியில், நரேந்திர மோடி போட்டியிடுவதால் அவருக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மே 12-ல், அங்கு தேர்தல் நடைபெறும் நிலையில், இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது.

மோடியை எதிர்த்து, டில்லி முதல்வராக, 49 நாட்கள் இருந்த, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது கட்சியினருடன் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

#TamilSchoolmychoice

குஜராத் முதல்வரான மோடி, அம்மாநிலத்தின் வதோதரா மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட, சில நாட்களுக்கு முன்னர் வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.