Home கலை உலகம் நஷ்டத்தை ஏற்படுத்திய நான் சிகப்பு மனிதன்!

நஷ்டத்தை ஏற்படுத்திய நான் சிகப்பு மனிதன்!

637
0
SHARE
Ad

Naan-Sigappu-Manithan1சென்னை, ஏப்ரல் 26 – நான் சிகப்பு மனிதன் படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்தது என்றாலும், அப்படத்தை உண்மையில் தயாரித்தது என்னவோ யுடிவி நிறுவனம்தான்.

யுடிவி கொடுத்த பணத்தில், தன் லாபமாக சில கோடிகளை எடுத்துக் கொண்டு மீதிப் பணத்தில் படத்தை எடுத்துக் கொடுத்தார் விஷால். அதன் பிறகு நான் சிகப்பு மனிதன் படத்தை வெளியீடு செய்து வியாபாரம் செய்வதும், அதன் லாப நஷ்டமும் யுடிவியைச் சேர்ந்தது.

எனவே நான் சிகப்பு மனிதன் படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் யுடிவி இறங்கியபோது, அவர்களிடம் விஷால் ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

அதாவது, பாரிவேந்தரின் வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்கும் தனக்கும் ஒரு ஒப்பந்தம் உள்ளதாகவும், அதனால் நான் சிகப்பு மனிதன் படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்குக் கொடுக்க வேண்டி இருக்கிறது.nan

எனவே படத்தை என்னிடமே கொடுத்துவிடுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதன்படி தமிழக திரையரங்கு விநியோகஸ்தர்கள் 10 கோடிக்கு விஷாலுக்குக் கொடுத்திருக்கிறது யுடிவி.

விஷாலோ அதை 11 கோடிக்கு வேந்தர் மூவிஸுக்கு விற்றிருக்கிறார். 11 கோடிக்கு வாங்கிய வேந்தர் மூவிஸ் சில கோடிகள் லாபம் வைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு பிரித்து விற்றிருக்கிறார். நான் சிகப்பு மனிதன் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததால் திரையரங்கு  விநியோகஸ்தர்களுக்கு சுமார் 25 சதவிகிதம் நஷ்டமாம்.