Home 13வது பொதுத் தேர்தல் அன்வாரை எதிர்த்து மகாதிர் போட்டியிட வேண்டும்-யூனியன் தலைவர்

அன்வாரை எதிர்த்து மகாதிர் போட்டியிட வேண்டும்-யூனியன் தலைவர்

656
0
SHARE
Ad

nordinகோலாலம்பூர், பிப்.15- பக்காத்தான் ரக்யாட் பெருந்தலைவர் அன்வார் இப்ராகிமைத் தொடர்ந்து சாடிவரும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுக்கு வரும் பொது தேர்தலில் அவரை எதிர்த்து நிற்கும் துணிச்சல் உண்டா என்று சவால் விடுத்துள்ளார் முன்னாள் யூனியன் தலைவர் ஒருவர்.

“அன்வார் பற்றி நீண்ட காலமாக தப்பும் தவறுமாகக் கூறப்பட்டு வந்துள்ளது”. அதற்கு முடிவுகட்ட இருவரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று மேற்கு மலேசிய மலாய் ஆசிரியர் சங்க முன்னாள் தலைவரான நோர்டின் மஹ்மூட் கூறினார்.

“மகாதிர், நாட்டுக்கும் மலாய்க்காரர்களுக்கும் நிறைய செய்திருப்பதாகக் கூறிக்கொள்கிறார்.

#TamilSchoolmychoice

“மக்களுக்குக் குறிப்பாக மலாய்க்காரர்களுக்கும் நாட்டுக்கும் நிறைய செய்திருப்பதாகவும் இன்னமும் மக்களின் ஆதரவு தமக்கு உண்டு என்றும் அவர் கூறிக்கொள்வதை நிரூபிக்க 13வது பொதுத் தேர்தலில் அவர் பக்காத்தான் ரக்யாட் பெருந்தலைவர் அன்வாருக்கு எதிராகக் களமிறங்க வேண்டும்”, என்று கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் குறிப்பிட்டார்.

“ எனவே, மக்கள் நியாயமான தீர்ப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு”, என நோர்டின் அறிவித்தார். நோர்டின், 1990-களில் தேசிய பொருளாதார ஆலோசனை மன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.