Home இந்தியா கொடநாடு சென்ற ஜெயலலிதா, ஹாங்காங் பறந்த மு.க.ஸ்டாலின்!

கொடநாடு சென்ற ஜெயலலிதா, ஹாங்காங் பறந்த மு.க.ஸ்டாலின்!

561
0
SHARE
Ad

jaya-stalinசென்னை, ஏப்ரல் 28 –  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தோடு ஹாங்காங் பறந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றி வந்த தலைவர்கள் தற்போது ஆளுக்கு ஒரு பக்கமாக கிளம்பிப் போய்க் கொண்டுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா இன்று கொடநாடு போய் விட்டார். ஆனால் அவருக்கு முன்பாக நேற்று நள்ளிரவே தனது மனைவி துர்கா, மருமகள், பேரன் பேத்திகள் என ஏழு பேருடன் ஹாங்காங் புறப்பட்டுச் சென்றார் ஸ்டாலின்.

ஹாங்காங் புறப்படுவதற்கு முன்பு தன்னை விமான நிலையத்தில் சந்தித்த செய்தியாளர்களிடம் திமுகவின் வெற்றி நல்ல பிரகாசமாக இருக்கிறது. 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் என்றார் ஸ்டாலின்.

#TamilSchoolmychoice

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தயாளம்மாள் பெயர் சேர்த்தது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அதுகுறித்து நீதிபதியிடம்தான் கேட்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.