Home கலை உலகம் மோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர் – லதா ரஜினிகாந்த்

மோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர் – லதா ரஜினிகாந்த்

612
0
SHARE
Ad

narendramodi,rajinikanthசென்னை, ஏப்ரல் 28 – மோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர் எனத் தெரிவித்துள்ளார் லதா ரஜினிகாந்த். தேர்தல் பிரச்சாரப் பணிக்காக கடந்த 13-ஆம் தேதி சென்னை வந்த பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.

அது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை, வெறும் நட்பு ரீதியான சந்திப்பு என ஏற்கனவே ரஜினி தரப்பில் விளக்கமளிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் மோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர் என தெரிவித்துள்ளார் லதா ரஜினிகாந்த்.

இது தொடர்பாக பத்திரிகை ஒன்றிற்கு லதா ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, நரேந்திரமோடி ரஜினியின் மிக நெருங்கிய நண்பராவார். ரஜினிகாந்த் உடல் நலம் சரிஇல்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது மோடி நேரில் வந்து பார்த்தார்.

#TamilSchoolmychoice

இப்போது அவர் எங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து எங்களை சந்தித்துள்ளார். இதனால் நாங்கள் அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறோம். அவர் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை கவுரவபடுத்தி விட்டார்’ என்றார்.
rajini-modi
மேலும், 24-ஆம் தேதி ஓட்டு பதிவின்போது ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லாமேரி கல்லூரியில் முதல் ஆளாக சென்று ஓட்டு போட்டது பற்றிக் கூறுகையில், ‘‘ரஜினி முதல் ஆளாக சென்று ஓட்டுபோட்டதற்கு எந்த திட்டமும் இல்லை.

அவர் எப்போதும் காலையிலே சென்று காத்திருந்து ஓட்டு போடுவார். அன்றும் அதேபோல் முன்கூட்டி சென்றார். அவர் முதல் ஓட்டு போடும் நிலை ஏற்பட்டது. ஆனால் அது தற்செயலாக நடந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், கோச்சடையான் படம் வெளியாவதில் எல்லாமே நல்லபடியாக சென்று கொண்டிருப்பதாக கூறிய லதா ரஜினிகாந்த், ‘தான் முதல் நாளில் முதல் காட்சியை ரசிகர்களோடு அமர்ந்து பார்க்க உள்ளதாகவும், அது தனக்கு சிறப்பான தருணம்’ எனவும் கூறியுள்ளார்.