Home நாடு தேசிய பள்ளி வாசலில் ஒபாமா! அதே பள்ளி வாசலில் இரு அமெரிக்க அதிபர்களைச் சந்தித்திருக்கும் தலைமை...

தேசிய பள்ளி வாசலில் ஒபாமா! அதே பள்ளி வாசலில் இரு அமெரிக்க அதிபர்களைச் சந்தித்திருக்கும் தலைமை இமாம்!

548
0
SHARE
Ad

Obama Mosque 600 x 300கோலாலம்பூர், ஏப்ரல் 28 – தனது மலேசிய வருகையின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று ஞாயிற்றுக்கிழமை தலைநகரிலுள்ள தேசிய பள்ளி வாசலுக்கு வருகை புரிந்தார்.

#TamilSchoolmychoice

ஒபாமாவை வரவேற்றவர் அப்பள்ளி வாசலின் தலைமை இமாம் ஆன டான்ஸ்ரீ ஷேக் இஸ்மாயில் முகமட் ஆவார்.

இவர் இரண்டு அமெரிக்க அதிபர்களை இதே தேசிய பள்ளிவாசலில் சந்தித்த அபூர்வ பெருமையைப் பெறுகின்றார்.

லிண்டன் ஜோன்சனைச் சந்தித்தார்

36-lyndon_johnson_14x181966 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன் (படம்) மலேசியாவிற்கு வருகை தந்த போது இப்போது இருக்கும் இதே தேசிய பள்ளி வாசலுக்கும் வருகை தந்தார்.

அப்போது 22 வயதுடைய இஸ்லாமிய கல்வி பயிலும் மாணவராக அவரைச் சந்தித்தவர் ஷேக் இஸ்மாயில் முகமட்.

கால ஓட்டத்தில் அந்த 22 வயது ஷேக் இஸ்மாயில்தான் இன்றைக்கு தேசிய பள்ளிவாசலின் தலைமை இமாமாக பொறுப்பு வகிக்கின்றார்.

நேற்று தேசிய பள்ளிவாசலுக்கு வருகை தந்த ஒபாமாவை வரவேற்று பள்ளிவாசலை சுற்றிக் காண்பித்ததின் மூலம் இரண்டு அமெரிக்க அதிபர்களை சந்தித்த பெருமையை ஷேக் இஸ்மாயில் பெற்றுள்ளார்.

உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதரர்களை அரவணைக்கும் நடைமுறையை பின்பற்றிவரும் ஒபாமா தனது மலேசிய வருகையின் ஒரு பகுதியாக தேசிய பள்ளிவாசலுக்கு நேற்று வருகை தந்தார்.

பள்ளி வாசலில் ஒபாமா 25 நிமிடங்களைக் கழித்தார்

வருகையின் போது சுமார் 25 நிமிடங்கள் பள்ளி வாசலை சுற்றிப் பார்த்த ஒபாமா அருகிலிருந்த மலேசிய மாவீரர்கள் கல்லறைக்குச் சென்று தனது மரியாதையை செலுத்தினார்.

ஒபாமா தன்னைச் சந்தித்தபோது,  தனக்காகவும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகளைத் துடைத் தொழிக்கும் தனது போராட்டத்திற்காகவும் பிரார்த்தனை செய்யும்படி தன்னைக் கேட்டுக் கொண்டதாக இமாம் ஷேக் இஸ்மாயில் கூறினார்.

எனது 22ஆவது வயதில் அப்போதைய அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சனை இதே இடத்தில் சந்தித்தேன். அப்போது நான் திருக்குரான் கல்வி கற்கும் மாணவனாக இருந்தேன். 50 ஆண்டுகள் கழித்து இன்னொரு அமெரிக்க அதிபரை இதே இடத்தில் இதே பள்ளி வாசலின் தலைமை இமாமாகச் சந்திப்பேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லைஎன்றும் இமாம் கூறினார்.

சில மலாய் வார்த்தைகளை மிக எளிதாக புரிந்து கொள்ளும் ஒபாவின் திறமை கண்டு தான் அவர் மீது மதிப்பு கொண்டதாகவும் தலைமை இமாம் தெரிவித்துள்ளார்.

ஒபாமாவின் அணுகுமுறை இஸ்லாமிய உலகின் நெருக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது என்றும் இமாம் ஷேக் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

தமது பிரத்தியேக லிமோசின் ரக வாகனம் மூலமாக தேசிய பள்ளிவாசலின் பிரதான நுழைவு வாயிலுக்கு வந்திறங்கிய ஒபாமாவை டான்ஸ்ரீ ஷேக்இஸ்மாயில் மற்றும் நிர்வாக உறுப்பினர்களும் வரவேற்றனர்.

கறுப்பு நிற சூட் உடையணிந்து வந்திருந்த ஒபாமாவை தொழுகை அறைக்கு அழைத்துச் சென்றார் இமாம். பின்னர் பள்ளி வாசலுக்கு அருகிலுள்ள போர் வீரர்களின் கல்லறையை ஒபாமா பார்வையிட்டார்.