Home அவசியம் படிக்க வேண்டியவை மலேசிய மக்கள் இயக்க பிரதிநிதிகளை ஒபாமா சந்தித்தார்

மலேசிய மக்கள் இயக்க பிரதிநிதிகளை ஒபாமா சந்தித்தார்

472
0
SHARE
Ad

US President Barack Obama visits Philippines.கோலாலம்பூர், ஏப்ரல் 28 – மலேசியாவிற்கு வருகை மேற்கொண்டிருந்த ஒபாமா அவர் தங்கியுள்ள ரிட்ஸ் கார்ல்டன் தங்கும் விடுதியில் பல்வேறு மலேசிய மக்கள் இயக்க பிரதிநிதிகளையும் சமுகத் தலைவர்களையும் சந்தித்தார்.

முதலில் 15 நிமிடங்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு ஏறத்தாழ 1 மணி நேரம் நீடித்தது.

இதில் மலேசியாவில் சுதந்திரமான தேர்தல்கள் நடைபெற போராட்டம் நடத்திவரும் பெர்சே அமைப்பும் கலந்து கொண்டதாக அதன் தலைவர் மரியா சின் அப்துல்லா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஒபாமாவுடனான சந்திப்புக் கூட்டத்தில் பல தேசிய பிரச்சினைகளும், மனித உரிமை விவகாரங்களும், தேர்தல் சீர்திருத்தங்களும் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இந்தச் சந்திப்பு மிகவும் சுமுகமாக நடைபெற்றதாகவும் அமெரிக்க அதிபர் கவனத்தோடு எங்களின் குறைபாடுகளை தீவிரமாக கேட்டுக் கொண்டார் என்றும் மரியா சின் தெரிவித்தார்.

தன்முன் வைக்கப்பட்ட இந்த விவகாரங்களில் சிலவற்றை தான் ஏற்கெனவே அறிந்திருந்ததாகவும் சரியான தருணத்தில் அவற்றை தான் கையாளப் போவதாகவும் ஒபாமா தெரிவித்தார்.

“கடந்த பொதுத் தேர்தல்களின் முடிவுகளையும் அதன் தொடர்பில் எங்களை போன்ற மக்கள் மன்றங்களின் கண்டுபிடிப்புகளையும் நாங்கள் கூறியிருப்பதால் தற்போது அவருக்கு இவை குறித்த தெளிவான விளக்கம் கிடைத்திருக்கின்றது” என்றும் மரியா சின் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும் பெர்சே அமைப்பின் முன்னாள் தலைவருமான டத்தோ அம்பிகா சீனிவாசனும் கலந்து கொண்டார்.

கிறிஸ்துவ, இஸ்லாமிய மத இயக்கங்களின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்புக் குறித்து பேசிய அம்பிகா சீனிவாசன் எங்களுக்கு கிடைத்த குறுகிய நேரத்தில் நாங்கள் மனித உரிமை, மதஇன பாகுபாடு, அரசியல் ரீதியான பழிவாங்குதல் குறிப்பாக அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான வழக்கு, எதிர்க் கட்சிகளுக்கு எதிரான வழக்குகள், பத்திரிகை சுதந்திரத்தை கட்டுப்படுத்துதல் போன்ற பல விவகாரங்களை தாங்கள் எழுப்பியதாக அம்பிகா தெரிவித்தார்.