Home வணிகம்/தொழில் நுட்பம் ஒபாமா வருகையின் போது ஏர் ஆசியா – ஜெனரல் எலெக்ட்ரிக் வர்த்தக ஒப்பந்தம்!

ஒபாமா வருகையின் போது ஏர் ஆசியா – ஜெனரல் எலெக்ட்ரிக் வர்த்தக ஒப்பந்தம்!

605
0
SHARE
Ad

US President Barack Obama visit Malaysiaகோலாலம்பூர், ஏப்ரல் 28 – அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மலேசிய வருகையின் இறுதி நாளான இன்று, அமெரிக்க நிறுவனங்களுக்கும் மலேசிய நிறுவனங்களுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் சடங்கில் அவர் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஏர் ஏசியா விமான நிறுவனத்திற்கும், அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

#TamilSchoolmychoice

இந்த ஒப்பந்தத்தில் ஏர் ஏசியா குழுமத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டோனி பெர்னாண்டசும், ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஜோன் ஜி.ரைஸ் என்பவரும் கையெழுத்திட்டனர்.

இதன்வழி, ஏர் ஏசியா எக்ஸ் நிறுவனத்தின்  A330 ரக விமானங்கள் 25க்கு ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம் இயந்திரங்களைத் தயாரித்து வழங்கும்.

இன்று ஒபாமாவின் மூன்று நாள் மலேசிய வருகையின் இறுதிக் கட்டமாக, மலேசிய-அமெரிக்க நிறுவனங்கள் கையெழுத்திட்ட இந்த உடன்படிக்கைகளின் மொத்த மதிப்பு சுமார் 1 பில்லியன் அமெரிக்க வெள்ளியாகும்.

ஏர் ஆசியா இன்றைய நிலையில் ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய மலிவு விலை விமான நிறுவனமாகும்.

இந்த கையெழுத்திடும் சடங்கில் எடுக்கப்பட்ட மேலே உள்ள படத்தில் ஏர் ஆசியா தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ் ஒபாமாவிடம் ஏதோ பேச்சு கொடுக்க, அதனைப் பிரதமரும் மற்றவர்களும் கவனிக்கின்றனர்.