Home வணிகம்/தொழில் நுட்பம் பழைய எல்சிசிடி விமான நிலைய டியூன் தங்கும் விடுதி மூடப்படும் – 2வது விமான நிலையத்தில்...

பழைய எல்சிசிடி விமான நிலைய டியூன் தங்கும் விடுதி மூடப்படும் – 2வது விமான நிலையத்தில் 400 அறைகளுடன் புதிய விடுதி

472
0
SHARE
Ad

Tune hotel KLIA 2 440 x 215சிப்பாங், மே 3 – புதிதாக திறக்கப்பட்டுள்ள 2வது விமான நிலையத்தில் எதிர்வரும் மே 9ஆம் தேதி முதல், 400 அறைகளுடன் கூடிய புதிய டியூன் (Tune) தங்கும் விடுதி (படம்) திறக்கப்படவிருக்கின்றது.

#TamilSchoolmychoice

டியூன் தங்கும் விடுதி மலிவு விலை விமான நிறுவனமான ஏர் ஆசியாவின் துணை நிறுவனமாகும்.

தற்போது எல்சிசிடி எனப்படும் பழைய மலிவு விலை விமான நிலையத்தில் இயங்கி வரும் டியூன் தங்கும் விடுதி இனி மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பழைய டியூன் தங்கும் விடுதியில் ஏற்கனவே தங்குவதற்கு முன் பதிவு செய்துள்ளவர்கள் இயல்பாகவே 2வது விமான நிலையத்தில் இயங்கும் டியூன் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்படுவார்கள் என டியூன் நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி மார்க் லங்காஸ்டர் தெரிவித்துள்ளார்.

மே 9ஆம் தேதியன்று பழைய டியூன் தங்கும் விடுதியில் தங்கி உள்ளவர்கள் அனைவரும் புதிய டியூன் தங்கும் விடுதிக்கு இலவசமாகவே மாற்றம் செய்யப்படுவார்கள்.

2வது விமான நிலையத்தில் இயங்கும் டியூன் தங்கும் விடுதிதான், அந்த நிறுவனத்தின் உலகெங்கும் உள்ள தங்கும் விடுதிகளில் மிகப் பெரிய தங்கும் விடுதியாகும்.

புதிய டியூன் தங்கும் விடுதிக்கான கட்டணம் 98 மலேசிய ரிங்கிட்டிலிருந்து தொடங்குகின்றது. பெரும்பான்மையான முன் பதிவுகள் இணையம் மூலமாகவே செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.