Home நாடு எம்எச் 370 : விமானம் தொடர்பாக பல கேள்விகளுக்கு விடை இல்லை – லிம் கிட்...

எம்எச் 370 : விமானம் தொடர்பாக பல கேள்விகளுக்கு விடை இல்லை – லிம் கிட் சியாங்

466
0
SHARE
Ad

Lim Kit Siangகோலாலம்பூர், மே 3 – எம்எச் 370 விமானம் காணாமல் போன சம்பவம் தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் முதல் கட்ட அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள  ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“மாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் வகை விமானம் காணாமல் போய் 8 வாரங்கள் ஆகிவிட்டன. 239 பயணிகளுடன் மலேசிய விமானம் காணாமல் போனதுஅனைவரையும் வேதனையில் ஆழ்த்துகின்றது. எம்எச் 370 காணாமல் போன பின்னர் நடந்தவற்றை விவரமாக விளக்கும் அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டது.திரும்பத் திரும்ப மறைப்பதற்கு ஒன்றுமில்லை என ஹிஷாமுடின் கூறினாலும் இந்த விவகாரத்தில் அரசாங்கம் தனது நம்பகத் தன்மையை இழந்துவிட்டது என்பது தெளிவாகியுள்ளது” என்றும் கிட் சியாங் சாடியுள்ளார்.

அவ்வறிக்கை, பாதையை விட்டு விலகிய விமானம் சென்றிருக்கக் கூடிய திசையை விவரித்ததுடன் விமானம் காணாமல் போனது தெரிந்தும் குழப்பம் நிலவியதாகவும் குறிப்பிட்டிருக்கின்றது.

விமானம் காணாமல் போனதற்கும் தேடும் பணியைத் தொடங்க முடிவெடுப்பதற்கும்இடையில் நான்கு மணி நேரம் கடந்துவிட்டது என அந்த அறிக்கை மேலும் கூறியது.

“அந்த விமானம்காணாமல் போனதை அடுத்து நடந்ததை விவரிக்கும் அறிக்கைதான் இது என்பதைத் தவிர எட்டுவாரங்களுக்கு முன் காணாமல் போன விமானம் பற்றிய பல கேள்விகளுக்கு அதில் விடைஇல்லை. விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே மிகப் பெரிய தேடும் பணிமேற்கொள்ளப்பட்ட பின்னரும் எம்எச் 370 காணாமல் போனது எப்படி என்பது புரியாதபுதிராகவே உள்ளது” என்று லிம் கிட் சியாங்  மேலும்தெரிவித்தார்.

மேலும் பல கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாத நிலையில் இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த இதுவரை நாடாளுமன்ற தேர்வுக் குழுவோ, அரச விசாரணை ஆணையமோ நியமிக்காமல் இன்னும் அரசாங்கம் இழுத்தடிப்பதும் எந்த வகையில் நியாயம் என்றும் லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பியுள்ளார்.