Home வணிகம்/தொழில் நுட்பம் வெளிநாடுகளில் 3 புதிய கிளைகளை சி.ஐ.எம்.பி. வங்கி திறக்கவுள்ளது

வெளிநாடுகளில் 3 புதிய கிளைகளை சி.ஐ.எம்.பி. வங்கி திறக்கவுள்ளது

647
0
SHARE
Ad

CIMBகோலாலம்பூர், மே 3 மலேசியாவின் முன்னணி வங்கிகளுள் ஒன்றான சி.ஐ.எம்.பி. வங்கி குரூப் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனம் (CIMB)  ஹாங்காங், சீனா, லாவோஸ் ஆகிய நாடுகளில் மூன்று புதிய வங்கிக் கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஹாங்காங், ஷாங்காயில் அடுத்த மாதத்திற்குள் அக்கிளைகள் திறக்கப்படும்.

லாவோஸ் கிளை இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டுக்குள் திறக்கப்படும். அக்கிளையை சி.ஐ.எம்.பி. தாய் வங்கிஎனப்படும் தாய்லாந்து நாட்டின் சிஐஎம்பி வங்கியின் இணை நிறுவனம் திறக்கவுள்ளது என்று அந்த வங்கி குழுமத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோஸ்ரீ நசீர் ரசாக் (படம்) தெரிவித்தார்.

Datuk-Seri-Nazir-Razak1-565x398இதனிடையே, பிலிப்பைன்ஸ், வியட்னாம் ஆகிய நாடுகளில் கிளைகளை திறப்பதற்கு சி.ஐ.எம்.பி. முயன்று வருவதாக அவர் தெரிவித்தார்.

பிலிப்பைன்சில் சரியான வாய்ப்புக்காக காத்திருப்பதாகத் தெரிவித்த அவர் வியட்னாமிய அரசாங்கத்திடமிருந்து வங்கித் தொழில் உரிமத்தைப் பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.