Home உலகம் எம்.எச்.370 – 2 வங்காளதேச கடற்படைக் கப்பல்கள் வங்காள விரிகுடாவில் தேடுதல் பணியைத் தொடக்கின.

எம்.எச்.370 – 2 வங்காளதேச கடற்படைக் கப்பல்கள் வங்காள விரிகுடாவில் தேடுதல் பணியைத் தொடக்கின.

554
0
SHARE
Ad

mh370டாக்கா, மே 3 – காணாமல் போன மாஸ் எம்.எச்.370 விமானம் வங்காள விரிகுடா பகுதியில் விழுந்திருக்கலாம் என துணைக் கோளப் படங்களை ஆதாரமாக வைத்து தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் இரண்டு வங்காளதேசக் கடற்படைக் கப்பல்கள் தேடுதல் பணிகளைத் தொடக்கியுள்ளன.

#TamilSchoolmychoice

ஆனால் இதுவரை எந்த வகைப் பொருட்களும் கிடைக்கவில்லை. இந்த தகவலை சிஎன்என் அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்தது.

ஆஸ்திரேலியாவின் ஜியோ ரிசோனன்ஸ் நிறுவனம் விழுந்து நொறுங்கிய கப்பலின் பாகங்கள் போன்ற பொருட்கள் வங்காள விரிகுடாவில் மிதந்து கிடக்கக் காணப்படுகின்றன என துணைக் கோளப் படங்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியிட்டிருந்தது.

காணாமல் போன விமானம் அங்கே விழுந்திருக்கலாம் என்ற தகவலில் தனக்கு நம்பிக்கையில்லை என்றாலும், அந்த தேடுதலில் பங்கு கொள்ள மலேசியா தயாராக இருக்கின்றது என்று இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் கூறியுள்ளார்.

இருந்தாலும் தாங்கள் தங்களின் மையத் தேடுதல் களமான இந்தியப் பெருங்கடலில் இருந்து கவனத்தை திசை திருப்ப விரும்பவில்லை என்று கூறியுள்ள ஹிஷாமுடின் வங்காள விரிகுடாவில் தேடுதல் பணியை மேற்கொண்டு எந்த சாதகமான பதிலும் கிடைக்காவிட்டால், அதனால் ஏற்படும் நேர இழப்புக்கு யார் பொறுப்பேற்பது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையில் “நாங்கள் தேடியவரையில் இதுவரை எங்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் கிடைக்கப்பெற்ற எல்லாத் தகவல்களும் உண்மையா என்ற அடிப்படையில் தாங்கள் தேடுதல் பணிகளைத் தொடர்வதாக வங்காள தேச கடற்படை புலனாய்வு இயக்குநர் கமாண்டர் ரஷிட் அலி கூறியுள்ளார்.

அனைத்துலக தேடுதல் பணிகளுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர், எங்கஸ் ஹூஸ்டன் காணாமல் போன விமானம் இந்தியப் பெருங்கடலில்தான் விழுந்திருக்க வேண்டும் என்ற தகவலில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார்.