Home உலகம் ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் 2,100 பேர் மரணம் – குவியல் குவியலாக பிணங்கள் கண்டெடுப்பு

ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் 2,100 பேர் மரணம் – குவியல் குவியலாக பிணங்கள் கண்டெடுப்பு

626
0
SHARE
Ad

Several hundred people feared dead after landslide in Afghanistan

காபூல், மே 4–ஆப்கானிஸ்தான்நாட்டில் நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கி ஒரு கிராமமே புதையுண்டுபோன அவலம் ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதுவரை குறைந்தது 2 ஆயிரத்து 100 பேர் உயிரிழந்தனர் என்ற தகவல்கள் வெளியான வேளையில் குவியல், குவியலாகபிணங்கள் கண்டெடுக்கப்படுகின்றன.

மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கு பகுதியில்தஜிகிஸ்தான், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் பதஷான் என்ற மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்தமழை பெய்து வந்தது.

Several hundred people feared dead after landslide in Afghanistanஇந்த பிரதேசத்தில் உள்ள பரீக் என்ற கிராமத்தில் கடந்தவெள்ளிக்கிழமையன்று இரண்டு மசூதிகளில் ஏராளமான முஸ்லிம்கள் கூடி தொழுகையில்ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்துஇரண்டு நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

இதில் பலத்த ஓசையுடன் அந்தக் கிராமமேபுதைந்து போனது. மசூதிகள், வீடுகள் இன்ன பிற கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போலசரிந்து விழுந்து அனைத்தும் மண்ணோடு மண்ணாகிப்போனது. எங்கு பார்த்தாலும்ஒரே மரண ஓலம்தான் கேட்டது.

குவியல் குவியலாக பிணங்கள்

இந்த நிலச்சரிவுகளில் சிக்கிஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 350 பேர் பலியாகி விட்டதாக ஐ.நா. சபை முதல்கட்ட தகவல் வெளியிட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்புப்படையினர், அவசர காலப் பணியாளர்கள் அங்கு விரைந்தனர். மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டன. தோண்டத் தோண்ட பிணக்குவியல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து அங்கு குறைந்தது 2,100 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது.

இதுதொடர்பாக பதஷான் மாநில கவர்னரின் செய்தி தொடர்பாளர் நவீத்போரோட்டன், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,  பரீக்கிராமத்தில் நேரிட்ட நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 2,100 பேர்உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 300 குடும்பங்களைச்சேர்ந்தவர்கள் என்று கூறினார்.

இந்தக் கிராமத்தில் ஏராளமானோர் காணாமல் போய் விட்டனர். அவர்களை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகின்றது.

ஆப்கான் அதிபர் இரங்கல்

நிலச்சரிவில்சிக்கியவர்களை மீட்க மீட்புக்குழுக்கள் அந்தக் கிராமத்தில்தொடர்ந்து முழுவீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில்,நிலச்சரிவில் பரீக் கிராமமே புதைந்து போய், 2,100 பேர்உயிரிழந்த துயர சம்பவத்துக்கு நாட்டின் அதிபர் ஹமீது கர்சாய் தன் ஆழ்ந்தஇரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம்?

Several hundred people feared dead after landslide in Afghanistanஇதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா. சபை வெள்ளிக்கிழமை நடந்தநிலச்சரிவில் சிக்கி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனர் என்றும்அவர்கள் மீது தற்போது  நாங்கள் எங்கள் கவனத்தை செலுத்தி வருகிறோம் என்றும் கூறியது.

இந்த நிலையில், அங்கு மீண்டும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம்உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன.

படங்கள் : EPA