Home தொழில் நுட்பம் கூகுள், இன்டெல் கூட்டுத்தயாரிப்பில் உருவான குரோம்புக்ஸ் அறிமுகம்!   

கூகுள், இன்டெல் கூட்டுத்தயாரிப்பில் உருவான குரோம்புக்ஸ் அறிமுகம்!   

365
0
SHARE
Ad

Intel-Google-set-to-release-more-Chromebooks-creating-stiffer-competition-for-Microsoft-300x259சான் பிரான்சிஸ்கோ, மே 7 – கூகுள் நிறுவனம், இன்டெல் நிறுவனத்துடன் இணைந்து, குரோம்புக்ஸ் என்ற பெயரில் புதிய டெஸ்க்டாப் கணினிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குரோம் இயங்குதளத்தில் இயங்கும், இந்த குரோம்புக்ஸ் பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது.

இதுபற்றி கடந்த செவ்வாய்க்கிழமை, சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அறிமுக விழாவில், கூகுளின் தயாரிப்பு மேலாண்மை பிரிவின் தலைவர் சீசர் செங்குப்தா கூறுகையில், “குரோம்புக்ஸ் கணினிகள், Core i3 மற்றும் Bay Trail M – class Celeron mobile processors ஆகிய ஆக்கக் கூறுகளை உள்ளடக்கியதா உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இதன் செயல்பாடு அதிவேகமானதாக இருக்கும். இதன் சேமிப்புக்களம் மின்சாரம் இன்றி, சுமார் 11 மணி நேரம் வரை தாங்கும் சக்தி கொண்டது”

“மேலும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ப்ளே மூவிஸ்’ (Play Movies) எனும் செயலி மூலம், பயனர்கள் இணையத்தொடர்பு (Offline) இன்றியும் படங்களையும், தொலைக்காட்சித் தொடர்களையும் காணமுடியும். இது தவிர, இன்னும் பல சிறப்பான அம்சங்களை வழங்கும் குரோம்புக்ஸ், பயனர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இன்டெல் தவிர அசுஸ், டெல், லெனோவா போன்ற நிறுவனங்களும் கூகுளுடன் இணைந்து குரோம் இயங்குதளத்தில் இயங்கும், மடிக்கணினிகள் மற்றும் குரோம் தயாரிப்புகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.