Home இந்தியா ஐபிஎல் 7: 2-வது வெற்றியைப் பதிவு செய்தது மும்பை!

ஐபிஎல் 7: 2-வது வெற்றியைப் பதிவு செய்தது மும்பை!

469
0
SHARE
Ad

ipllமும்பை, மே 7 – மும்பை அணியை அதன் சொந்த மண்ணிலேயே சந்திக்கத் தயார் என்று வார்த்தைப் போரில் ஈடுபட்ட பெங்களூரு அணி, 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஐபிஎல் தொடரில் 5 தொடர் தோல்விகளுக்குப் பிறகு மும்பை அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். மும்பையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை எடுத்தது. இரண்டாவதாகப் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து , 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

#TamilSchoolmychoice