Home கலை உலகம் உடல் ஆரோக்கியத்திற்காக குத்துச்சண்டை கற்கிறேன் – நமீதா

உடல் ஆரோக்கியத்திற்காக குத்துச்சண்டை கற்கிறேன் – நமீதா

554
0
SHARE
Ad

namithaசென்னை, மே 7 – நமீதா சினிமாவுக்கு இடைவெளி விட்டு உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறார். உடற்பயிற்சி கூடங்களிலேயே பல மணி நேரம் செலவிடுகிறார்.

சமீபத்தில் குத்துச் சண்டையும் கற்க ஆரம்பித்துள்ளார். தேசிய குத்துச் சண்டை சாம்பியனிடம் அவர் இந்த பயிற்சியை பெற்று வருகிறார். நமீதா அடுத்த புதுப்படமொன்றில் குத்துச் சண்டை வீராங்கனையாக நடிக்கப் போவதாகவும், அதற்காகவே குத்துச் சண்டை கற்கிறார் என்றும் செய்திகள் பரவின.

இது குறித்து நமீதாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது, கடந்த மூன்று மாதங்களாக நான் தீவிரமாக குத்துச் சண்டை பயிற்சி எடுத்து வருகிறேன். உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்காகவே இந்த பயிற்சியில் ஈடுபடுகிறேன்.

#TamilSchoolmychoice

அடுத்த படத்தில் நடிப்பதற்காகவே இந்த பயிற்சி எடுக்கிறேன் என்று வெளியான செய்தியில் உண்மை இல்லை. நடிப்பதில் இருந்து கொஞ்சம் ஓய்வு எடுத்தேன்.

நான் அடுத்து நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்க இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக அதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்குகிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள ஆக்ஷன் படமாக அது இருக்கும் என நமீதா கூறினார்.