Home உலகம் பில் கிளிண்டன் தொடர்பு: “எனக்கு நானே ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” – மோனிகா லெவின்ஸ்கி

பில் கிளிண்டன் தொடர்பு: “எனக்கு நானே ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” – மோனிகா லெவின்ஸ்கி

1487
0
SHARE
Ad

Monica Lewinski 440 x 215வாஷிங்டன், மே 7 – சுமார் 20 வருடங்களுக்கு முன்பு முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் அந்தரங்க உதவியாளராக இருந்த மோனிகா லெவின்ஸ்கி அப்போது தனது 20வது வயதில் பில் கிளிண்டனுடனான உடல் ரீதியான தொடர்பால் ஏற்பட்ட சர்ச்சையில் சிக்கினார்.

தற்போது 40 வயதாகும் மோனிகா,  அப்போது நடந்தவற்றை தற்போது ஓர் இதழில் எழுதிய கட்டுரையில் “எனக்கு நானே ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்”  என்று கூறி கிளிண்டனுடனான உறவை ஒப்புக் கொண்டுள்ளார்

கடந்த 1998 ஆம் ஆண்டுகளில் முன்னாள் அதிபர் பில்கிளின்டன்- மோனிகா லெவின்ஸ்கி உடல் ரீதியான விவகாரம் அமெரிக்க அரசியலை பரபரப்புக்குள்ளாக்கியது.

#TamilSchoolmychoice

அமெரிக்க அதிபராக பில் கிளின்டன் இருந்த போது வெள்ளை மாளிகையில் இவரது அந்தரங்க உதவியாளராகப் பணியாற்றினார் மேனிகா லெவின்ஸ்கி. அப்போது அவர் 20 வயது இளம் பெண்.

அப்போதே இருவரும் உடல் ரீதியாக உறவு கொண்டதாக கிளின்டன் மீது பரபரப்பு வழக்கு எழுந்தது.   முதலில் மறுத்த கிளின்டன் பின்னர் மரபணு சோதனையில் குட்டு வெளியானதால், அதனைத் தொடர்ந்து உண்மையினை ஒப்புக்கொண்டார்.

கிளின்டனின் புகழுக்கு இந்த செயல் பெரும் அவமானத்தை தேடித்தந்தது. இருப்பினும் அதிபர் பதவியிலிருந்து விலகாமல், சட்ட ரீதியாகப் பிரச்சனையை அணுகி, அவர் இரண்டு தவணைகள் முழுமையாக அமெரிக்க அதிபராக நீடித்தார்.

தற்போது 40 வயதாகும் மோனிகா லெவின்ஸ்கி வானிட்டி ஃபேர் என்ற இதழுக்கு  கட்டுரை ஒன்று எழுதி உள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“என் கடந்த கால காதல் வாழ்க்கை மற்றும் மற்றவர்களின் எதிர்காலம் ஆகியவற்றை நினைத்துப் பார்க்கிறேன். என்னுடைய கதையின் முடிவினை வித்தியாசமாக முடித்து வைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்” என்று கூறியுள்ளார்.

“பில் கிளிண்டனின் அதிகாரம் மிகுந்த வாழ்க்கையினை பாதுகாப்பதற்காக நான் ஒரு பலியாடு ஆக்கப்பட்டேன். இதன் பின்விளைவாக ஏதோ துஷ்பிரயோகம் தொடர்ந்தது.. “என்று அந்த மாத இதழின் இணைய தளப் பதிப்பில் வெளியான கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “எனக்கு நானே ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறேன்… எனக்கும் அதிபர் கிளிண்டனுக்கும் இடையில் நடந்தவற்றுக்காக! மீண்டும் நான் சொல்கிறேன்.. நான், எனக்கு நானே… மன்னிப்பு. எது நடந்ததோ அதற்காக!”.

அடிக்கடி நடந்த விசாரணைகளால் பெரிதும் மன உளைச்சல் அடைந்த மோனிகா லெவின்ஸ்கி, தான் சில முறை தற்கொலைக்கு முயன்றதாகக் கூறியுள்ளார்.

உலக அளவில் பெருத்த அவமானத்தை ஏற்படுத்திய இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக இணைய தளத்தில் குரல் கொடுக்கும் முதல் நபராக நான் இருந்தேன் என்றும் மோனிகா கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில், இணைய வெளியில் இது போன்ற அவமானச் செய்திகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக பொதுவில் பேசுவதற்கான மேடைகளில் தான் பங்கேற்று வருவதாக அவர் அந்தக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவார் என்ற ஆரூடங்கள் கூறப்பட்டு வரும் வேளையில் மீண்டும் மோனிகா, பில் கிளிண்டன் விவகாரம் குறித்து வாய் திறந்திருப்பது தற்செயலா, அல்லது ஹிலாரி கிளிண்டனின் அதிபர் ஆகும் வாய்ப்பைக் கெடுக்கும் திட்டமிடப்பட்ட செயலா என்ற பரபரப்பு தற்போது அமெரிக்க அரசியலில் எழுந்துள்ளது.