Home நாடு கமலநாதன் தலைமையில் FOCUS-A மின்கல்வி தளம் வழங்கும் நிகழ்வு!

கமலநாதன் தலைமையில் FOCUS-A மின்கல்வி தளம் வழங்கும் நிகழ்வு!

460
0
SHARE
Ad
cdசிலாங்கூர், மே 13 – மலேசியாவில் மாணவர்கள் எளிதாக மின்கல்வி மூலம் உலக அளவிலான பாடத்திட்டங்களை கற்கும் நோக்கத்தில் “Creative Dreams International” எனும் மின்கல்வி நிறுவனம் சிலாங்கூர்/கூட்டரசு பிரதேசத் தமிழ்ப் பள்ளிகளுக்கு மாணவர்கள் பயன்பாட்டிற்காக இலவச மின்கல்வி தளம் வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வை கல்வி துணையமைச்சர் ப.கமலநாதன் தொடங்கி வைக்கவுள்ளார். இந்நிகழ்வு குறித்து “Creative Dreams International” நிறுவனம் சார்பாக தனேஷ் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கை பின்வருமாறு:-

“மலேசிய நுணுக்கமான கல்வித் திட்டம் 2013-2025 அடிப்படையாக கொண்டு நாட்டில் பல நன்மை பயக்கும் திட்டங்களை அரசாங்கம் மக்களுக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளது. அவற்றில் ஒன்று தான் 1BestariNet (திறப்பாட்டுத் திட்டம்) ஆகும்.”

“இத்திட்டத்தின் வழி மலேசியாவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் போதிக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்காகவும் 21-ஆம் நூற்றாண்டின் கல்வி உலகத்தில் எளிய முறையில் இன்று இவர்களின் கைகளில் தவழவிட்டிருக்கின்றனர்.”

#TamilSchoolmychoice

“அதிவேக 4G இணையம் வாயிலாக உலக வர்க்க கற்றல் மையத்தை ஒரே தளத்தில் கொண்டு சேர்த்து எளிதான கற்றல் உலகத்தை ஒன்றிணைத்த உலகிலேயே முதல் நாடு என்றால் அது நம் நாடான மலேசியா திருநாடாகும். இன்று மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கல்வி சார்ந்த பிணைப்பினை இத்தளம் எளிதான முறையில் கற்றல் கற்பித்தல் திட்டத்தின் வழி தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.”

“மலேசியாவில் முதல் முறையாக ஒவ்வொரு மாணவர்களும் உலக தரம் வாய்ந்த கற்றல் கருவிகளை அணுக வேண்டும், மேலும் சிறந்தக் கல்வியினைப் பெற்றிருக்க வேண்டும் என்பதே இந்த்திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.”

“உலக மாற்றங்களுக்கு உட்பட்டு நவீன தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப மாறி வரும் கல்வி முறையே மின்கல்வியாகும். உலகளாவிய நிலையில், வளரும் நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளும் மின்கல்வி ஆளுகையைக்  கையாளும் கட்டாய நிர்ப்பந்தனைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.”

“இதனை கருத்தில் கொண்டே “Creative Dreams International” எனும் மின்கல்வி நிறுவனம் மலேசிய நுணுக்கமான கல்வித் திட்டம் 2013-2025 முன்பே மின்கல்வி தளத்தை உலகளாவிய நிலை இட்டுச் சென்ற பெருமை நம் மலேசியா வாழ் இந்தியர் திருவாளர் தினேஷ் குமார் அவர்களுக்கே சாரும் என்றால் மிகையாகாது.”

“எதிர்வரும் 15ஆம் திகதி மே மாதம் 2014, காலை மணி 10.00 முதல் மதியம் 2.00 வரை தமிழ் அறவாரியமும் “Creative Dreams International” நிறுவனமும் ஒன்றிணைந்து சிலாங்கூர்/கூட்டரசு பிரதேசத் தமிழ்ப்பள்ளிகளுக்கு மாணவர்கள் பயன்பாட்டிற்காக இலவச மின்கல்வி தளம் வழங்கப்படவுள்ளது. இதனை மலேசியா கல்வி துணையமைச்சர் மாண்புமிகு ப.கமலநாதன் அவர்களால் எடுத்து வழங்கப்படவுள்ளது.”

“இந்நிகழ்விற்கு அனைத்து கல்விமான்களும் பெற்றொர்களும் திரளாக வந்து ஆதரவு அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு குறித்த மேல் விபரங்களுக்கு செல்வி உஷாராணி (+6016-970 0765) என்பவரைத் தொடர்பு கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.