Home வணிகம்/தொழில் நுட்பம் ஏர் ஏசியாவில் போலி பாஸ்போர்ட்களை கண்டறிய புதிய முயற்சி!

ஏர் ஏசியாவில் போலி பாஸ்போர்ட்களை கண்டறிய புதிய முயற்சி!

556
0
SHARE
Ad

airasia2LGமே 14 – ஆசியாவில் மிகவும் மலிவான விலையில் பயணிகளுக்கு விமானச் சேவையினை வழங்கி வரும் ஏர் ஏசியா நிறுவனம், பயணிகளின் பாஸ்போர்ட் பரிசோதனைப் பற்றி நேற்று புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன் படி பயணிகளின் பாஸ்போர்டினை இன்டர்போல் நிறுவனத்தின் தரவுத்தளத்துடன் ஒப்பிட்டு சோதனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த இன்டர்போல் தரவுத்தளத்தில் சுமார் 42 மில்லியன் தொலைந்து போன பாஸ்போர்ட்கள் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கும். இதன் மூலம் போலி பாஸ்போர்ட்டுடன் பயணம் செய்ய நினைக்கும் பயணிகளை உடனுக்குடன் கண்டறிய முடியும்.

சமீபத்தில் மாயமான மாஸ் விமானம் 370-ல் இரண்டு நபர்கள் போலி பாஸ்போர்ட்டுடன் பயணம் செய்தது கண்டறியப்பட்டது. இன்டர்போல் நிறுவனம் போலி பாஸ்போர்ட்கள் பற்றி எச்சரிகை செய்தும், மலேசியன் ஏர்லைன்ஸின் கவனக் குறைபாட்டால், அவர்கள் பயணம் செய்ததாகக் கூறப்பட்டது. இதன் காரணமாக ஏர் ஏசியா நிறுவனம், தனது விமானப் பாதுகாப்புப் பிரிவின் பிடியை இறுக்கியுள்ளது.

#TamilSchoolmychoice

இது பற்றி  ஏர் ஏசியா நிறுவனம் கூறுகையில், “இன்டர்போலின் I-Checkit  மூலம் பயணிகளின் பாஸ்போர்ட்கள் பரிசோதனை செய்யப்படும். இந்த பரிசோதனையானது,  ஏர் ஏசியா 600 சர்வதேச விமானங்களிலும் தொடர்ந்து நடத்தப்படும்” என்று கூறியுள்ளது.