Home இந்தியா ஐபிஎல்7: ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை வெற்றி!

ஐபிஎல்7: ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை வெற்றி!

639
0
SHARE
Ad

iplllராஞ்சி, மே 14 – ராஜஸ்தானனுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின்  கேப்டன் வாட்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய  ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள்  எடுத்தது. 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய சென்னை அணி 19.4  ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து  வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.