Home தொழில் நுட்பம் விரைவில் புதுப் பொலிவுடன் ஜிமெயில்!

விரைவில் புதுப் பொலிவுடன் ஜிமெயில்!

527
0
SHARE
Ad

GMAILமே 14 – பயனர்களுக்கு பல்வேறு இணைய சேவைகளை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் கூகுள் நிறுவனத்தின், ஜிமெயில் மின்னஞ்சல் சேவையானது அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்ட இணைய சேவையாகும். தற்போது, கூகுள் நிறுவனம், இச்சேவையினை மென்மேலும் மெருகேற்றி பயனர்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு பல்வேறு புதிய நுட்பங்களை கொண்டு மேம்படுத்தி வருகின்றது.

ஜிமெயில் பயனர் இடைமுகத்தில் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையிலும், மின்னஞ்சல் சேவையினை எளிதாக்கவும் இந்த மாற்றங்கள் செய்யப்படுவதாக, கூகுள் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதன் சிறப்பு அம்சங்கள் பற்றி தொழில்நுட்ப பத்திரிகைளில் கூறப்படுவதாவது:-

#TamilSchoolmychoice

“இணைய இடைமுகமானது, ‘ரெஸ்பான்ஸிவ் டிசைன்’ (Responsive Design) உத்தியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், திரையில் நிறுத்தப்படும் படங்கள், ஸ்க்ரீன் சாட் போன்ற கூறுகள், திரைக்கு தகுந்தவாறு அதன் அளவினை மாற்றி நிலைநிறுத்தப்படும்.”

“திரையின் இடது புறத்தில் ஃபெலை-இன் (Fly-In) மெனுக்களும், வலது புறத்தில் உடனடியாக அணுகக்கூடிய மெனுக்களும் இடம்பெற்று இருக்கின்றன.மேலும், இதன் இன்பாக்ஸில் உள்ள மின்னஞ்சல்களை, அதன் தொடர்புகளுக்கேற்ப வரிசைபடுத்துக் கொள்ளும் வசதியும், இந்த புதிய ஜிமெயில் வடிவமைப்பில் இடம்பெற்றுள்ளது.” என்று கூறுகின்றன.

அனைத்து ஆக்கக் கூறுகளும் முடியும் தருவாயில் உள்ளதால், வரும் ஜூன் மாதம், இந்த புதிய ஜிமெயில் வடிவமைப்பு பற்றி கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.