Home இந்தியா மோடியுடன் பா.ஜ.க தலைவர்கள் இன்று சந்திப்பு!

மோடியுடன் பா.ஜ.க தலைவர்கள் இன்று சந்திப்பு!

537
0
SHARE
Ad

modi,athvaaniஅகமதாபாத், மே 14 –நாளை மறுநாள் நாடாளுமன்ற தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ள நிலையில் பா.ஜ.க, மூத்த தலைவர்களான ராஜ்நாத்சிங், அருண்ஜேட்லி, நிதின் கட்காரி ஆகியோர் நரேந்திரமோடியை சந்தித்து பேச உள்ளனர்.

இவர்கள் மூன்று பேரும்குஜராத் மாநிலம் காந்திநகரில்மோடியை சந்தித்துதேர்தல் முடிவுகள் மற்றும் அவை தொடர்பான நிலைப்பாடுகள் குறித்து விவாதிக்க உள்ளனர். மேலும்அரசியலின் எதிர்காலம் மற்றும் மத்தியில் ஆட்சி அமைப்பது குறித்தும்,அத்வானிக்கு அளிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறித்தும்விவாதிக்கப்பட உள்ளதாக பா.ஜ.க, செய்தி தொடர்பாளர்தெரிவித்தார்.

RAJNATHவாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க மத்தியில் ஆட்சி அமைத்த போது அத்வானி துணை பிரதமராக பதவி வகித்தார்.பின்னர் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் வெறும் 116 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே பெற்ற பா.ஜ.க,வால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் மீண்டும் காந்திநகரில் போட்டியிட்டுள்ள அத்வானிக்கு கட்சியில் அளிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறி்த்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாகமோடியும், ராஜ்நாத்சிங்கும்ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களை தனித்தனியாக சந்தித்தனர்.