Home நாடு திரெங்கானு விவகாரம்: இரு சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா வாபஸ் பெறப்பட்டதா?

திரெங்கானு விவகாரம்: இரு சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா வாபஸ் பெறப்பட்டதா?

690
0
SHARE
Ad

trio_newபுத்ரா ஜெயா, மே 14 – திரெங்கானு மாநில அரசாங்கத்தில் கடந்த இரண்டு நாட்களாக நிலவி வரும் தலைவர்கள் ராஜினாமா தொடர்பான பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசிக்க பிரதமர் நஜிப் துன் ரசாக்குடன் இன்று மதியம் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், அச்சந்திப்பில் முன்னாள் மந்திரி பெசார் அகமட் சைட் கலந்து கொள்ளமாட்டார் என்று கூறப்படுகின்றது.

எனினும், சைட்டுடன் பதவி விலகிய அஜ்லி மற்றும் புக்கிட் பீசி சட்டமன்ற உறுப்பினர்களான கஸாலி தாயிப் மற்றும் ரோஸ்லி டவுட் ஆகிய இருவரும் நேற்று இரவு தங்களது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டனர் என்றும், இன்று அவர்கள் இருவரும் நஜிப்பை சந்திக்கவுள்ளனர் என்றும் பத்திரிக்கை செய்தி ஒன்று கூறுகின்றது.

#TamilSchoolmychoice

இதனிடையே, இன்று மதியம் நஜிப்புடனான சந்திப்பிற்குப் பிறகு புதிய மந்திரி பெசாரான அகமட் ராசிப் அப்துல் ரஹ்மான் பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.