Home நாடு கெமாமான் இடைத் தேர்தல் : டிசம்பர் 2 – மகாதீர் போட்டியிடுவாரா?

கெமாமான் இடைத் தேர்தல் : டிசம்பர் 2 – மகாதீர் போட்டியிடுவாரா?

381
0
SHARE
Ad

கோலதிரெங்கானு : திரெங்கானு மாநிலத்தின் கெமாமான் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 18-ஆம் தேதி நடைபெறும் என்றும் போட்டியிருப்பின் வாக்களிப்பு டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 17) அறிவித்தது.

தேர்தல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் கடந்த 15-வது பொதுத் தேர்தலில் கெமாமான் நாடாளுமன்றத் தொகுதியில் பாஸ் கட்சி பெற்ற வெற்றி, ஊழல் அம்சங்கள் காரணமாக, செல்லாது என கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. பாஸ் கட்சி நீதிமன்ற முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவில்லை என்பதால் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பாக போட்டியிட்ட பாஸ் வேட்பாளர் சே அலியாஸ் ஹாமிட் 27,179 வாக்குகள் பெரும்பான்மையில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார். தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட திரெங்கானு மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் அகமட் சைட், பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளர்  ஹாசுனி சுடின், பெஜூவாங் வேட்பாளர் ரோஸ்லி அப்துல் கானி ஆகியோரை பாஸ் வேட்பாளர் தோற்கடித்தார்.

#TamilSchoolmychoice

கெமாமான் இடைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் துன் மகாதீரை பாஸ் வேட்பாளராக நிறுத்தும் என்ற ஆரூடங்கள் பரவி வருகின்றன.

141,790 வாக்காளர்களை கெமாமான் கொண்டிருக்கிறது.